பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் સ્વઃ நூற்பா ଖ୍ଯ <୫! ருள்ள ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன் ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை அறிவுசேர் உள்ளமொ டருந்தவம் புரிந்து துன்னிய மாந்தரஃ தென்ப பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே' எனவரும். (யாப் வி.ப கருஅ ) இவ்வகையினான் ஒருபாட்டிறுதி மற்றைப்பாட்டி னாதிச்சீராகி வருதல் கொள்க.1 இத்துணையுங் கூறப்பட்டன சிறப்புடையவென ஒரு நிகராகக் கூறுப. இனி 'மீன்தேர்ந் தருந்திய கருங்கால் வெண்குருகு." இது கடையிணைமுரண்.2 (யாப். வி. ப. க.ச.அ) பின்முரணாவது நாலாஞ்சீரும் இரண்டாஞ்சீரு மொன்றத் தொடுப்பது; அது, 'கொய்ம்மலர் குவிந்து தண்ணிழல் விரிந்து என வரும் (யாப். வி. ப. க.ச.அ) கடைக்கூழை முரணாவது முதற்சீரொழித்து மூன்றுசீரும் ஒத்து வருவது. உதாரணம் வந்தவழிக் காண்க. இடைப்புணர் முரணாவது இடையிருசீரும் ஒன்றத் தொடுப்பது; அது, 'போதுவிடு குறிஞ்சி நெடுந்தண் மால்வரைக் கோதையில் தாழ்ந்த ஓங்குவெள் அருவிக் காந்தளஞ் செங்குலைப் பசுங்கூ தாளி வேரல் விரிமலர் முகையொடு விரை இப் பெருமலைச் சிறுரர் இழிதரு நலங்கவர்ந் தின்னா வாயின. இனியோர் மாட்டே' என வரும். (யாப். வி. ப. கசக) 1. இவ்வாறு ஒரு செய்யுளுள்ளே வரும் அடிகள் அந்தாதித்தொடையமையவருதல் கொண்டு ஒருசெய்யுளின் இறுதி அடுத்த செய்யுளின் முதலாய் வரும் பனுவலாகிய அந்தாதியமைப்பும் கொள்க என்பதாம். 2. கடையினை முரணாவது அடியின்கடையிலுள்ள நான்காஞ்சீரும் மூன்றாஞ்சீரும் இணைந்து ஒன்றத்தொடுப்பது.