பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருளஅ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் மோனை எதுகை இயைபு அளபெடையினும் இவ்வாற்றான் வருவன வந்தவழிக் காண்க. இனி, உயிர்மோனை யாவது முதலெழுத்தாகிவந்த உயிரெழுத்து மற்றை யடியினும் வருவது ; அது, 'கயலேர் உண்கண் கலுழ நாளுஞ் சுடர்புரை திருநுதல் பசலை பாய (யாப். வி. ப. கங் சு) என வரும். எதுகைக்கும் இதுதானேயாம். நெடின்மோனையாவது நெட்டெழுத் தொத்துவருவது : "தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார்” (குறள். ங் கூ கூ) என வரும். நெடிலெதுகையாவது : 'ஆவா என்றே அஞ்சினர் ஆழ்ந்தார் ஒருசாரார் கூகூ என்றே கூவிளி கொண்டார் ஒருசாரார்’ (யாப். வி. ப. கா. க) என வரும். இனவெதுகை மூன்றுவகை. 'தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும். (குறள். ககச ) இது வல்லின வெதுகை. 'அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு.” (குறள். எச ) இது மெல்லின வெதுகை. "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.” (குறள். உகக.) இஃது இடையின வெதுகை. மோனையும் இவ்வாறு வருவன பாகுபடுத்துக் கொள்க. ஆசெதுகையாவது இடையினவொற்று இடைவரத் தொடுப்பது. "காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகி னெற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து