பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருகம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் இது, மேற்கூறிய தொடைக்காவதொரு புறனடை, (இ - ள்) அறுநூற்றிருபத்தைந்து அடியோடு மாறிப் பெற்ற தொடை பதின்மூவாயிரத் தெழுநூற்றெட்டெனப்பட்டன மேல்; இனி அவ்வடி ஒன்றன்கண்னேயன்றி ஒன்றுநிற்ப நின்றவடி அது நூற்றிருபத்து நான்கனையுந் தந்து தந்து தடுமாற வந்து தோன்றுந் தொடை விகற்பமும் இருசீரடி முதலாக எண் சீரடியீறாகக் கிடத்த அடி வேறுபாட்டின்கனெல்லாம் இத் தொடைகளைக் கூட்டவும் பிற விகற்பத் தொடைகளைக் கூட்டவும் வருந் தொடைப்பகுதி வரையறையின்றிப் பலவாம் (எ . து}.1 வரையறை உடையனவற்றுக் கன்றி வரையறை கூறுதல் பயமின்றாகவின் ஒழிந்த விகற்பமெல்லாங் கூறிய நிலங் கூறிற்றில னென்பது உம், "மெய்பெறு மரபிற் றொடைவகை” (தொல், செய். 101) எனப்பட்டன வரையறையுடைமையின் அது கூறினானென் பது உஞ் சொல்லினான் இச்சூத்திரத்தானென்பது.? 1. அறுநூற்றிருபத்தைந்து அடியோடு அந்த அந்த அடிகளை இரண்டாமடி அாகவைத்துப் பெருக்கிப்பெற்ற தொடை 13788 என மேல் வரையறுரைக்கப் பட்டன. இனி அவ்வவ்வடிகட்கு முன்னே அவையல்லாத ஏனைய 634 நான்கடி களையுந் தனித்தனியே தந்து பெருக்கத்தோன்றும் தொடை விகற்பமும், இங்கு எழுத்தெண்ணி எடுத்துக்கொள்ளப்பட்ட நாற்சீரடியல்லாத ஏனைய இருசீரடி முதலாக எண்சீரடியீறாகக்கிடந்த அடிவேறுபாட்டின்கனெல்லாம் மோனையெதுகை முரண் இயைபு அளபெடை யென்னுந் தொடைகளைக் கூட்டவும் பொழிப்பு ஒரூஉ முதலிய பிற விகற்பத் தொடைகளைக் கூட்டவும் வரும் தொடைப்பகுதியெல்லாம் எல்லையின்றிப் பலவாய் விரியும் என்பதாம். 2. வரையறையுள்ளனவற்றுக்கன்றி வரையறையில்லாதவற்றுக்கு வரையறை கூறுதல் பயனில்லாத முயற்சியாதலின் வரையறையுடையனவாக இங்கு எடுத்துக் கொள்ளப்பட்ட தொடைப்பகுதிக்குரிய நிலமன்றி வரையறையில்லாத ஏனைய தொடைவகைகளுக்குரிய நிலம் இங்குக் கூறினேன் அல்லேன் எனவும், மெய் பெறு மரபின் தொடைவகை எனப்பட்ட தொடைகள் வரையறையுடைமையின் அவற்றுக்குரிய வரையறையினையே இங்குக்கூறினேன் எனவும் ஆசிரியர் தொல்காப்பியனார் இச்சூத்திரத்தால் புலப்படுத்தினார் எனக் கருத்துரைப்பர் பேராசிரியர்.