பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகஉ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் கூக. தொடைநிலை வகையே! 'பாங்கென மொழிப. இனம்பூரணம் : என்-எனின். இதுவுந் தொடைக் குரியதோர் மரபுணர்த்து தல் நுதலிற்று. (இ, ள்.) தொடைநிலைவகை மேற்சொல்லப்பட்ட பாகு பாட்டின? என்றவாறு. எனவே வகுத்துணர்த்துவார்க் கெல்லாம் இடனுடைத்து என்றவாறாம் 3 அஃதாவது எழுத்தான் வேறுபடுதலும் சொல்லா ன் வேறு படுதலும் பொருளான் வேறுபடுதலுமாம். இத்துணை யுத் தொடை கூறப்பட்டது." இதுவுமது, மேல் ஒருசாரன வரையறையுடைமையிற் கூறப்பட்டனவென்புழி, ஒழிந்தன வரையறையின்மையிற் கூறப்படாவெனவுங் கூறினானைக் கண்ட மாணாக்கன், வரம்பில் லன தொடுக்கப்படாகொல்லென ஐயுற்றானை அவையுந் தொடுக்கப்படுங் கண்டாயெனக் கூறினமையின் ஐயம் அறுத்ததெனவும் அமையும்.8 1. தொடைவகைநிலையே' என்றாடம் பேராசிரியர் நச்சினார்க்கினியர் உரைகளிற் காணப்படுகிறது. ஆங்கு என மொழிப-(மேற்சொல்லப்பட்ட) அவ்வகையின என்று கூறுவர். 3. தொடைநிலைவகை மேற்சொல்லப்பட்டபாகுபாட்டினையுடையன' எனவே, இப்பாகுபாடுகள் மேலும் இ த்தொடைகளை வகுத்துணர்த்துவார்க்கெல்லாம் இடத்தரும் என்பதாம். 4. இவ்வியல் அக-ஆம் சூத்திரம்முதலாக கூகூ-ஆம் சூத்திரமுடியத் தொடை வகை பற்றிய இலக்கணம் கூறப்பட்டது என்பதாம். 5. பதின் மூவாயி, எழுதுற்றெட்டு’ என்ற வரையறை கூறிய தொடைப் பகுதிகளே செய்யுளில் தொடுக்கப்படுவன. வரையறையில்லாதனவாய தொடைகள் செய்யுளில் தொடுக்கப்படாவோ எனவினவிய மாணவனை நோக்கி வரையறை யுடையனவும் வரையறையில்லாதனவும் ஆகிய இருவகைத் தொடைகளும் செய்யுளில் தொடுக்கப்படுவனவே. ஆயினும் இருவகைத் தொடைப்பகுதியுள் வரையறையுடைய தொடைப்பகுதியினை மட்டும் தெரியவிரித்துரைத்தோம். அப்பகுதியுளொன்றாகிய வரையறையில்லாத தொடைப்பகுதியினை இங்குத் தெரிய விரித்துரைத்திலம் என ஆசிரியர் இச்சூத்திரத்தினால் ஐயம் அகற்றினார் என்பது இதற்குப் பேராசிரியர் தரும் விளக்கமாகும்.