பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரூககள் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணுதல் கணவன்” (முருகாற் கசு) என்றவழி 'ஒளி' என்பது அதனயற் கிடந்த தாளை நோக்காது கணவனை நோக்குதலின் இடையிட்டு நோக்கிற்று. பிறவுமன்ன. 3. இது, நிறுத்த முறையானே நோக்குணர்த்துகின்றது. நாற் சொல்வழக்கினையும் பாவிற்படுப்பது மரபென்றான். எனவே, ஆண்டு நோக்கி யுணரப்படுவதொன்றின்றிச் செய்யுளுள்ளும் வழக்கியல்பினவாகி வெள்ளைமையுமாய்க் காட்டுவனவாயின; அவ்வாறன்றி நோக்கென்பதோர் உறுப்புப்பெற்ற வழியே அது செய்யுளாவதாகலான் அது கூறுகின்றானென்பது: (இ-ன்) மாத்திரையும் எழுத்தும் அசைநிலையுஞ் சீரும் முதலாக அடி நிரம்புந்துணையும் நோக்குடையவாகச் செய்தல் வன்மையாற் பெறப்படுவது நோக்கென்னும் உறுப்பாவது (எ-று). கேட்டார் மறித்துநோக்கிப் பயன்கொள்ளுங் கருவியை நேர்க்குதற் காரணமைன்றாமென்பது. அடிநிலைகாறுமென்பது ஒரடிக்கண்ணேயன்றியுஞ் செய்யுள் வந்த அடி எத்துணையாயி னும் அவை முடிகாறு மென்றவாறு. வரலாறு: “முல்லை வைந்துனை தோன்ற இல்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணி அவிழ இரும்பு திரித்தன்ன மாயிரு மருப்பிற் பரலவல் அடைய இரலை தெறிப்ப 1. அடிநிறைகாறும்’ என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். அடிநிலைகாறும் எனப்பாடங்கொண்டார் இளம்பூரணர் என்பது முன்னர் அடிக் குறிப்பிற் குறிக்கப்பட்டது. நாற்சொல்லாலாய உலகியல் வழக்கினைப் பாவின்கண் அமைப்பது மரபு என மேற்கூறிய ஆசிரியர், அங்ங்ணம் அமைக்குங்கால் வழக்கியல்போன்று வெள்ளைமைகலவாது, அரும்பொருள்களைத் தன்னகத்தேகொண்டு, அப்பொருளை உய்த்துணர்தற்குக் கருவியாகிய நோக்கு என்னும் உறுப்புடையதாய் வருவதே செய்யுளாதவின் நோக்கு என்னும் உறுப்பினை இங்குக் கூறுகின்றார். 2. காரணம் கருவி. அவைமுடிகாறும் எனவரும் இவ்வுரைத்தொடரால், 'அடிநிறைகாறும் என்பதே பேராசிரியர் கொண்ட பாடம் என்பது நன்கு புலனாம்,