பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ள ருகக இவ்வாறே பலவும் நோக்கி யுணர்தற்குக் கருவியாகிய சொல்லும் பொருளும் எல்லாம் மாத்திரை முதலா அடிநிறை காறுமென அடங்கக்கூறி நோக்குதற்காரணம் நோக்கென்றா னென்பது. மாத்திரை முதலாயினவுந் தத்தம் இலக்கணத்தில் திரியாது வந்தமையின் அவையும் அவ்விலக்கணம் அறிவார்க்கு நோக்கிப் பயன் கொள்ளுதற்கு உரியவாயினவாறு கண்டு கொள்க. 'எனப்படு மென்றதனான் இவ்வாறு முழுவதும் வந்தன நோக்குதற்குச் சிறப்புடையவெனவும் இவை யிடையிட்டு வந்தன. சிறப்பிலவெனவுங் கொள்ளப்படும். பிறவும் அன்ன. (கOச) நச்சினான் க் கிரிையம் : இது நிறுத்தமுறையானே நோக்குணர்த்துகின்றது. இது மேல் நாற்சொல்லாற் செய்யுஞ் செய்யுள் வழக்கியல்பினவாய் வெள்ளைமை கலந்து நிற்றலாகா தென்பதோரிலக்கணம். (இ-ள்.) மாத்திரை.............. காறும். எ-து மாத்திரை முதலிய வுறுப்புக் கொண்ட வடிநிரம்புற்துணையும். நோக்கு காரணம்: எ , து கேட்டோர் மீண்டுநோக்கிப் பயன். கோடலையுடையவாகச் செய்யுங் கருவியை. நோக்கு ... ... ...... படுமே. எ- து நோக்கென்று பெயர் கூறப்படுமென்றவாறு அடி நிறைகாறுமென்றது. ஒரடிக்கனன்றிச் செய்யுள் வந்தவடி யெத்துனை யானும் நின்று முடிகாறும். எ - று. உ -ம். “முல்லை வைத்துனை தோன்ற வில்லமொடு பைங்காற் கொன்றை மென்பிணிய விழ விரும்புதிரித் தன்ன மாயிரு மருப்பிற் பரலவ லடைய விரலை தெறிப்ப மலர்ந்த ஞாலம் புலம்புபுறக் கொடுப்பக் கருவி வானங் கதழுறை சிதறிக் கார்செய் தன்றே கவின்பெறு கானங் முன் பக்கத் தொடர்ச்சி பட்ட அளவேயன்றி மணம் முற்றிலும் நீங்காவாயுள்ளன, அவர் பிரிந்து நெடுங் காலம் அன்மையின், எனத்தோழி வற்புறுத்தியதிறம் இவ்வடிகளை மறித்து நோக்குவார்க்கு இனிது புலனாதல் காண்க. 1. காரணம் - கருவி 2. நிறைகாறும் - நின்று முடியுமளவும்.