பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/540

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூஉம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் குரங்குளைப் பொலிந்த கொய்சுவற் புரவி நரம்பார்ப் பன்ன வாங்குவள் பரியப் பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாதுண் பறவை பேதுற லஞ்சி மணிநா வார்த்த மாண்வினைத் தேர னுவக்காண் டோன்றுங் குறும்பொறை நாடன் கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது நெடும்பெருங் குன்றத் தமன்ற காந்தட் போதவி ழலரி னாறு மாய்தொடி யரிவை நின் மாணலம் படர்ந்தே' (அகம் - ச} வைந்துணை யென்றதனா லலருந்துணையு மெல்லென்னாது வன்மையவாய்க் கூரிதாய் நிற்றலி னரும்பி யணித்தென்பது கூறிற்று இல்லமுங் கொன்றையும் பிணி யவிழ்ந்தனவென்றது, அவையு மரமாதலிற் கடிதிற்கரியாவாக லிற் கடிதிற்கரிந்த முல்லைக்கு முன்னே மெல்லிய பிணியவிழ்ந்தமை கூறிற்று. காய்ந்த விரும்பு முறுக்கிவிட்டவழியும் வெப்பமாறாதவாறு போல நீர் தோய்ந்தும் வெயிலுழந்த வெப்ப மின்னுந்தனிந்தில் வென்பதுதோன்ற இரும்புதிரித்தன்ன மருப்பென்றார். இரலை குழிதோறுந் தெளிந்து நின்ற நீர்க்கு விருந்தினவாதலிற் பலகால் நீர்பருகுதற்குப் பரலையுடைய பள்ளத்தைச்சேர நின்றது என்றதாம். இத்துணையும் பருவந் தொடங்கியதுணையே வற்புறுத்திக் கூறிற்று. புலம்பு முழுவது நீங்கிற்றென்னாது ஒருபுடை தோன்றப் புறக்கொடுத்ததென்றமையின் அதுவும் பருவந் தொடங்கிய துணையே கூறிற்று. தொகுதியையுடைய மேகங் காற்றின் விசையான் விரைந்த கொடுந்துளியைச் சிதறிற்றெனவே புதுமை கூறிற்று. இத்துணையும் பருவந்தொடங்கி யணித்தென்றலின் வற்புறுத்தற்கு இலேசானமை நோக்கிற்று. கொய்யாத வுளை பெருகுதலுங் கொய்த வுளை பல்காற் கொய்யப் பெருக வேண்டுதலுங் கூறவே குதிரை மனச்செருக்குக் கூறிற்றாம். அதன் கழுத்து வளையும்படி விசித்தவாரொலி நரம்பிற்கு ஒதிய நால்வகைக் குற்றத்தினும் ஆர்ப்பென்னுங் குற்றமெய்திய நரம்போசைபோல விசைப்பவென்க. பூத்தபொங்கரென்பதனாற் பசிப்பிணிதீர நுகரும் பொருளை யதுகுறைவறக் கொடுப்ப வுண்டு மகிழ்ந்து பின்பு