பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/542

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கு.உ.உ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் காலத்துப் பிரிவிற்குடம்பட்டாள்போன் றுடம்படாது நின்ற - - - - * * - * - நலத்தை அது மெய்ப்பாடாம். இங்ங்ணம் கோடல் நோக்கென்றுணர்க. ஆங்கவுரை : இது, செய்யுளுக்கு இன்றியமையாத நோக்கு என்னும் உறுப்பு உணர்த்துகின்றது. (இ-ன்) மாத்திரையும் எழுத்தும் அசை நிலையும் சீரும் முதலாக அடி நிரம்பும் அளவும் நோக்குடையவாகச் செய்தல் வன்மையாற் பெறப்படும் கருவி நோக்கென்னும் உறுப்பாகும் எ-று. ஒரு செய்யுளைக் கேட்டோர் அதன்கண் மாத்திரை முதலாக அடி நிரம்புந்துணையும் பாடற்பகுதியினை மீண்டும் மீண்டும் கூர்ந்து நோக்கி அப்பாடலின்கண் அமைந்த பொருள் நலங்களை உய்த்துணர்தற்குக் கருவியாயதோர் உறுப்பு நோக்கு எனப்படும் என்பதாம். நோக்காவது யாதானும் ஒன்றைத் தொடுக்குங்காலத்துக் கருதிய பொருளை முடிக்குங்காறும் பிறிது நோக்காது அது தன்னையே நோக்கி நிற்கும் நிலை” எனவும் அடிநிலை காறும் என்றதனால் ஒரடிக்கண்ணும் பலவடிக்கண்ணும் நோக்குதல் கொள்க’ எனவும், அஃது ஒரு நோக்காக ஒடுதலும் பலநோக்காக ஓடுதலும் இடையிட்டு நோக்குதலும் எனப் பலவகைப்படும் எனவும் கூறுவர் இளம்பூரணர். அடிநிலைகாறும்’ என்பது இளம்பூரணர் பாடம். “அடிநிறை காறும்’ எனப் பாடங்கொள்வர் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும். நாற்சொல்லால் ஆய உலகியல் வழக்கினைப் பாவின்கண் அமைப்பது மரபு என மேற்கூறிய ஆசிரியர், அங்ஙனம் அமைக்குங்கால் வழக்கியல் போன்று வெள்ளைமை கலவாது, அரும் பொருள்களைத் தன்னகத்தே கொண்டு, அப்பொருளை உய்த்துண்ர்தற்குக் கருவியாகிய நோக்கென்னும் உறுப்புடையதாய் வருவதே செய்யுள் என்பது விளங்க நோக்கு என்னும் உறுப்பினை ஈண்டுக் கூறினார் என்பர் பேராசிரியர், இங்ங்னம் நோக்கி உணர்தற்குக் கருவியாகிய சொல்லும் பொருளுமெல்லாம் அமையவந்த நோக்கென்னும் உறுப்பினை, “முல்லை வைந்துனை தோன்ற” (அகம்-4) எனவரும் அகநானுாற்றுப்