பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருஉச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் வருதலானும் வெண்பாவுறுப்பாகி வருதலானும் கலிப்பாக் கூறினா ரெனவறிக..! (கoக) நோக்கே பாவே (102) யென நிறுத்தமுறையானே நோக் குணர்த்திப் பாவுணர்த்தியவெழுந்தான்? அதனை இத்துணைப். பெயர் வேறுபாட்டதெனவும், பொருட்குரிமையவும் அடிக்குரிமையவுமாமாறுஞ் செய்யுட்கு வரையறைவகையான் உரியவாறும் ஒரோசெய்யுட்கண் ஒரோவுறுப்புப்பற்றி வருங்கால் அவ்வுறுப்புக்கள் இத்துணையடியவாகுமெனவும் எல்லாங் கூறுவான் தொடங்கினமையின். அவற்றுள் இது, பெயர் வேறு பாடும் அஃது இனைத்தென விரியும் உணர்த்துகின்றது 3 இவ் வுறுப்பு வேறுபாட்டானே, உறுப்பியலாகிய செய்யுளும் இவ் வாறு பெயர்கொள்ள வைத்தானென்பது. (இ - ள்) ஆசிரியப்பாவும் வஞ்சிப்பாவும் வெண்பாவுங் கலிப்பாவுமென நாற்கூற்றது பாக்களவற்று விரி, (எ று) வகை யென்றதனான் உறுப்பாகிய செய்யுளின் வேறுபட நோக்கி உணரப்படும் இவ்வுறுப்பெனவும், இவற்றுள் வழக்கிற் குரியன செய்யுட்கு வந்தனவும் வழக்கிற்கேயுரியவாகிக் கூறு 1. ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி என்னும் இம்முறைவைப்பு, ஆசிரிய நடைத்து வஞ்சி, வெண்பாநடைத்து கலிஎன்னும் பாவின்தொகைவரை - யறையைக் கருதியமைத்ததாகும், (செய்யுளியல் சை - ஆம் சூத்திரம் நோக்குக) வெண்பா ஆசிரியம் கவி வஞ்சி என்னும் முறைவைப்பு வெண்பாமுன்வந்து அகவல் பின்னாகவரும் மருட்பா என்னும் பாவிரிவரையறையினையும் கலியும் வஞ்சியும் வெள்ளைச் சுரிதகமும் ஆசிரியச் சுரிதகமும் பெற்றுவரும் தொடர்பினையும் கருதியமைந்ததாகும். இவ்வாறன்றி தால்வகைப் பாக்களை நால்வகை வருணவேறுபாட்டுடன் பிற்காலகரையாசிரியர்கள் ஒப்பிட்டுரைக்கும் விளக்கம் தொல்காப்பியனார் முதலிய முன்னைத்தமிழ்ச்சான்றோர் கருத்துக்கு ஏற்புடையதன்றென்க. 2. பாவுனர்த்திய எழுத்தான் பா என்னும் உறுப்புணர்த்தத் தொடங் கினான். 3. இச்சூத்திரம் பாவினது பெயர் வேறுபாடும் அது நால்வகைத்து என்பதும் உணர்த்துகின்றது. 4. உறுப்பியாகிய செய்யுளும் என்றிருத்தல் பொருத்தமாகும். உறுப்பிஉறுப்பினையுடையது. 5. பாக்களவற்றுனிசி என்னும் உரைத்தொடர் பாக்கூற்றுவிரி' என்றிருத்தல் வேண்டும், 6. உறுப்பியாகிய' என்றிருத்தல் வேண்டும்.