பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ன்க டு-ேகு படுவனவும், ஒன்றொன்றனோடு விராய்ப் பிறக்கும் பகுதியுமெல்லாங் கொள்ளப்படும். பாக்கூற்றுவிரி நான்கெனவே, பாவினை உறுப்பாகவுடைய செய்யுட்கு வரையறை கூறிற்றிலனென்பது பெற்றாம்; என்னை? அவற்றுப் போதுங்கால்! அவற்றது பெயர் வேறுபாடும் அச்சூத்திரங்களான் அறிது. மென்பது; என்றார்க்கு இவை நான்கேயன்றிப் பாவாமாறு, கூறானோவெனின், இவையின்றித் தூக்குப் பிறவாமையின், இப்பாவிலக்கணமும் நோக்கோத்தினுட் கூறினானாகலான்: ஆண்டோ தியவாறே அமையுமென்பது. இக்கருத்தே பற்றிப், "பாவென மொழியினுந் தூக்கினது பெயரே' (யா. வி 241) என்றார் இந்நூலின் வழிநூல் செய்த ஆசிரியருமென்பது: 'உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை பலங்குதலை யீந்தின் சிலம்பிபொதி செங்காய்' துகில்பொதி பவள மேய்க்கும் அகில்படு கள்ளியங் காடிறந் தோரே! (ஐங்குறு) என்பது, ஆசிரியப்பா உறுப்பாகி வந்த செய்யுள். "வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும்” (பத்துபட்டின.1-2) என்பது, வஞ்சிப்பா உறுப்பாகி வந்த செய்யுள். 'வாரிய பெண்ணை வருகுரும்பை வாய்த்தனபோ லேரிய வாயினு மென்செய்வ - கூரிய கோட்டியானைத் தென்னன் குளிர்சாந் தணியகலங் கோட்டுமண் கொள்ளா முலை” . (முத்தொள்ளாயிரம்-71) என்பது, வெண்பாவுறுப்பு வந்த செய்யுள். அரிதாய வறனெய்தி” (கலி-11) என்பது, கலிப்பாவுறுப்பு வந்தது. பிறவும் அன்ன. 1. அவற்றுறுப்போதுங்கால்' எனத்திருத்திப் பொருள்கொள்க. 2. தாக்கோத்தினுட் கூறினானாகலான் எனத்திருத்திப் பொருளுணர்க. 3. இந்நூலின் வழிநூல்செய்த ஆசிரியர் என்றது. இத்தொல்காப்பியத்தின் வழி யாப்பிலக்கண நூல் செய்த நத்தத்தனார் என்னும் ஆசிரியரை. நத்தத்தனார் இயற்றிய யாப்பிலக்கணநூற் சூத்திரங்கள் பல யாப்பருங்கலவிருத்தியுள் ம்ேற். கோளாக எடுத்தாளப் பெற்றுள்ளமை காணலாம்.