பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருஉசு தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் இவை இன்ன அடியான் வந்தன வென்பது என்னையறியு மாறெனின், அதுவன்றே துரக்குப் பயம்படுகின்ற இடமென்பது. மூன்றுபாவினை நாற்சீரானும், வஞ்சிப்பாவினை இருசீரானும் முச்சீரானுந் தூக்குக்கொண்டு இத்துக்காமாறு உணர்ந்து கொள்க :2 ஆசிரியம் வெண்பாக் கலி வஞ்சியெனச் சிறப்புமுறையாற் கூறாத தென்னையெனின், அது, “முந்து மொழிந்ததன் றலைதடு மாற்றே" (தொல்-மரபியல்-110) என்பாருமுளர். வஞ்சிப்பா முதற்கூறாமையின் ஆற்றன்றென் பது. மற்றென்னை கருதியதெனின், ஆசிரியம் வெண்பாவென்று ஒதினவை வழக்கிற்குஞ் செய்யுட்கும் உரிமையின் அவையே போலுஞ் சிறப்புடையவென்று கொள்வானாயினும், அற்றன்று: இவை செய்யுளிலக்கணமாகலான் அவை நான்கும் ஒத்த இலக் கணத்த செய்யுளென்றற்கு இம்முறையான் ஒதினானென்பது : இனி ஒருசாரார் இந்நான்கனையும் ஒன்று மூன்றாக விகற். பித்துக் கூறுப; என்னை? ஏந்திசை தூங்கிசை ஒழுகிசை என்றாற்போல; அற்றன்று ஒரெழுத்துமுதல் ஐயெழுத்துச் சீரளவும் உயர்ந்த சீரான்வரும் செய்யுட்கு ஒன்று ஒன்றனின். வேறுபட்டொலிக்கும்; அவ்வேறுபாடுதோறும் பாவேறுபடா; என்னை? 1. துரக்கு என்னும் உறுப்பினைக்கொண்டே அடிகளைத் துணித்து நிறுத்தி இன்னஅடியான் வந்தன இன்னபா என அறிந்து கொள்ளுதல் வேண்டும். 2. ஆசிரியம், வெண்பா, கலி என்னும் மூன்து பாவினையும் நாற்சீராலும் வஞ்சிப்பாவினை இருசீராலும் முச்சீராலும் அடிகளைத் துணித்து நிறுத்துதல் கொண்டு தூக்கு என்னும் உறுப்பாமாறு இதுவென உணர்ந்து கொள்க என்பதாம். 3. ஆசிரியர் இங்கு எண்ணிய முறையில் வஞ்சிப்பாவிற்கு இலக்கணம் முதற்கண் கூறாமையின் இது முந்து மொழிந்ததன் தலை தடுமாற்றம் எனக்கொள்ளுதற்கில்லை, 4. ஆசிரியம் வெண்பா என்று ஒதின் அவை வழக்கிற்குஞ் செய்யுட்கும் உரிமையின் அவையேபோலுஞ் சிறப்புடையவென்று கொள்ளநேரும், இவை செய்யுளிலக்கண்மாதலான் 'அவை நான்கும் ஒத்த இலக்கணத்தன செய்யுள்' என்றற்கு இம்முறையான் ஒகினான்.