பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எாக ரு உன் "எழுத்தள வெஞ்சினுஞ் சீர்நிலை தானே குன்றலு மிகுதலு மில்வென மொழிப’ (தொல்-செய்-43) என்றமையினென மறுக்க; அல்லதுTஉம் அங்ங்னம் வேறுபாடு கொள்ளின் ஒரோவொன்று ஐந்தாகலுந் துங்கலோசை ஆறும் ஏழுமாகலுமுடையவென்பது.1 (கoரு) நச்சினார்க் திரிையம்: இது நிறுத்த முறையானே பாவென்னு முறுப்புணர்த்துகின்றது. (இ - ள். ஆசிரியப்பாவும், வஞ்சிப்பாவும், வெண்பாவும், கலிப்பாவுமென நான்கு கூற்றது பாக்கூற்று விரி எ-று. வகை யென்றதனாற் றுக்கின் றொடர்ச்சியாகிய இப்பாவென்னும் உறுப்பு நிகழுமோசையையும் அது நிகழுஞ்செய்யுளின் வேறுபடநோக்கிச் செய்யுட்கோ ருறுப்பென்றுணர்க வென்பது உம், வழக்கிற்குரியன செய்யுட்கு முரியவாமென்பது உம் ஒரோர் செய்யுட்கண் ஒரோவுறுப்பு வருமாறும் ஒன்றொன்றனோடு விராஅய்ப் பிறக்கும் பகுதியும், பொருள் வரையறையும், அடிவரையறையும் எல்லாங்கொள்க. பா நான்கெனவே, பாவினை யுறுப்பாகவுடைய செய்யுளும் நான் கென்னும் வரை யறையும் அவற்றாற் பெயர் கோடலும் அச்சூத்திரங்களாற் பெறுதும். ‘தூக்கே பாவே' யென்பதற்குப் பாவென மொழியினுந் தாக்கினது பெயரே' யென்றார். இதன்வழிநூலோரும். உ -ம் உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை யலங்குகுலை யீந்தின் சிலம்பிபொதி செங்காய் 1. பாக்களிற் பயிலுஞ் சீர்கள் ஒரெழுத்து முதல் ஐந்தெழுத்தளவும் எழுத்துக்களால் வேறுபடினும், அச்சீர்களின் ஒசை குறைதலும் மிகுதலும் இல்லையென்பது தொல்காப்பியனார் கருத்தாதலின், பிற்காலத்தார் ஒவ்வொரு பாவின் ஒசையினையும் ஏந்திசை துங்கிசை ஒழுகிசை என்றாற்போன்று மூவகை யாகப் பகுத்துரைக்கும் ஒசைப்பாகுபாடு தொல்காப்பியனார்க்கு உடன்பாடன்றென்பது புலனாம். அன்றியும் இங்ஙனம் எழுத்தமைப்புப்பற்றிப் பாவினைப் பகுத்துரைக்கப்புகின் ஆசிரியம் வெண்பா கலி என்னும் மூவகைப்பாவோசைகளும் ஒவ்வொன்றும் ஐவகைப்படுதலும், வஞ்சிப் பாவின் துங்கலோசை ஆறும் ஏழும் ஆதலும் உடையன. சீர்களின் எழுத்தளவு வேறுபடினும் பாவேறுபடுதல் இல்லையென்பதே தொல்காப்பியனார் துணிபாகும்.