பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ள உ ருஉக 6}f &_. அந்நிலை மருங்கின் அறமுத லாகிய மும்முதற் பொருட்கும் உரிய வென்ப. இளம்பூரணம் : என்-எனின். மேற்கூறப்பட்ட பாக்கள் பொருட்குரியவா. மாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) அப் பாக்கள் நான்கும் பொதுப்பட நின்றவழி அறம்பொருளின்ப மென்னும் மூன்று முதற் பொருட்கும் உரிய என்றவாறு. முதற்பொருள் என்றது பாகுபாடல்லாத பொதுமைகுறித்த, பொருள். சில பொருள்களை எடுத்து விலக்குகின்றாராதலின், இவ்வாறு கூறப்பட்டது 2 அப்பொருட்கண்3 உரியவாகியவாறு சான்றோர் செய்யுளகத்துக் கண்டுகொள்க. (கoஉ) இது, பாவினைப் பொருட்குரியவாற்றான் வரையறை கூறு வான் தொடங்கிப் பொருட்குரிமை பொதுவகையான் உணர்த்துகின்றது; இது பொருளதிகாரமாகவின் இங்ங்னங் கூறுகின்றான். (இ-ள்) அந்நிலை மருங்கின்-அம் மேலைச்சூத்திரத்துத் தோற்றுவாய் செய்யப்பட்ட செய்யுளினிடத்து: அறமுதலாகிய 1. அறம், பொருள், இன்பம் எனத் தனித்தனியே பகுத்துரைக்கப்படுதலின்றி அம் மூன்றினையும் ஒன்றாக அடக்கிய பொதுமையுடையபொருள் என நால்வகைப் பாக்களுக்கும் ஒப்ப உரிய பொருளின் முழுமை நிலைமையினைப் புலப்படுத்துவார். அறமுதலாகிய முப்பொருள் என்னாது அறமுதலாகிய மும்முதற்பொருள் என்றார் என்பது இத்தொடர்க்கு இளம்பூரணர் தரும் விளக்க மாகும். 2. அறம் பொருள் இன்பம் என்னும் பகுப்பிற் சிலபொருள்களைக் குறிப்பிட்டு இவை இன்னபாவிற்கு வாரா என ஆசிரியர் விலக்குதலால், இங்கு மும்முதற்பொருள் என்றது அங்கனம் விலக்கப்படும் மூவகைப் பகுப்பினைச் சுட்டாது அம்மூன்றற்கும் பொதுவாகிய பொருட்பொதுமையினையே சுட்டி நின்றது எனக் காரணங்காட்டுவார், 'சிலபொருள்களை எடுத்துவிலக்குகின்றாராதலின் இவ்வாறு கூறப்பட்டது' என்றார். 3. அப்பொருட்கண்-அறம் பொருள் இன்பம் எனப் பிரிக்கப்படாது முழுமையாய் அறம்பொருள் இன்பம் என்னும் மூன்றனையும் உள்ளடக்கிய பொதுமைப்பொருளின் கண்ணே. 4. அந்நிலை என்றது, மேலைச்சூத்திரத்தில் தோற்றுவாய் செய்யப்பட்ட செய்யுளை. மருங்கு - இடம்.