பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உ நச்சினார்க் திரிைதும்: இது பாப்பொருட்குரிமை கூறுகின்றது. (இ-ள் ) மேலைச்சூத்திரத்திற் றோற்றுவாய் செய்யப்பட்ட செய்யுளிடத்து வரும் அறம் பொருளின்பமென்னும் மூன்று முதற்பொருட்கும் அந்நான்கு பாவு முரியன. எ - று. மும்முதற் பொருளெனவே, அவற்றது துனைப்பொருளாகிய அறநிலையின்மையும் பொருணிலையின்மையும் இன்பநிலை யின்மையும் அடங்குமென்ப. உலகியற் பொருண் மூன்றனையு மிவையெனக்கூறி அவற்றை விடுமாறுங் கூறவே விடுங். கூறிற்றாம். அது கூறுதற்குரிய செய்யுளும் மேற்கொச்சகமென்று கூறுமாறுனர்க, ஆய்வுரை : இது, முற்கூறிய பாக்கள் பொருட்கு உரியவாமாறு உணர்த்துகின்றது. (இ-ஸ்) மேற்குறித்த பாக்கள் நான்கும் அறம் பொருள் இன்பம் என்னும் மூன்று முதற்பொருட்கும் உரியன என்று கூறுவர் ஆசிரியர் எவறு. శi f_ பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின் ஆசிரி யப்பா வெண்பா என்றாங் காயிரு பாவினுள் அடங்கும் என்ப. இாைம்பூரணம் : என்-எனின். மேற்சொல்லப்பட்ட பாக்களைத் தொகைவகையான் உணர்த்துதல் துதலிற்று. (இ-ள்.) மேற்சொல்லப்பட்ட நான்கு பாவும் ஆசிரியப்பா வெண்பா என இரண்டாய் அடங்கும் என்றவாறு? முன் பக்கத் தொடர்ச்சி முப்பொருளுடன் வீடுபேறாகிய நாற்பொருட்கும் நிலைக்களமாவது செய்யுளே என அதன் சிறப்புணர்த்தும் நிலையில் அமைந்துள்ளமை உணர்ந்து போற்றத்தகுவதாகும். 1. அறமுதலாகிய மும்முதற்பொருளது வகையாகிய, 2. பாவிரிமருங்கு - பாவாகிய ஓசை பலபகுதிப்படவிரியும் பக்கம். பலவாகிவிரியும் செய்யுளின் ஒசைப்பகுதியாவும் அகவல், செப்பல் என்னும் இரண்டாயடங்கும் என்பதாம்.