பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருங்கள் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் (இ- ள். வாழ்த்தியலின்வகை நான்கு பாவிற்குமுரித்து என்றவாறு.1 வகையென்றது தேவரை வாழ்த்தலும் முனிவரை வாழ்த்தலும் ஏனையோரை வாழ்த்தலும். செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. (கCரு) பேராசிரிழம் , இது, மேற்கூறிய மும்முதற் பொருட்கண்' (தொல்-செய்106) ஒரு சாரானவற்றை வாழ்த்துதல் என்பதோராறும் உண் மையின் அப்பகுதி நான்கு பாவிற்கும் உரித்தென்கின்றது 3 நால்வகைப்பட்டது பாவாகலின் அப்பாவினை நான்கென் றான்; வாழ்த்தியலென்னாது வகை யென்றதனான் மேற்கூறிய மும்முதற்பொருளின் அறுவகையும் பெரும்பான்மை யெனப்படு மென்பது உம், அங்ஙனம் வாழ்த்துங்கால் தனக்குப் பயன் படுதலும் படர்க்கைப்பொருட்குப் பயன்படுதலுமென இரு வகையான் வாழ்த்துமென்பது உம், இனி முன்னிலையாக வாழ்த்துதலும் படர்க்கையாக வாழ்த்துதலும் என இருவகைப் படுமென்பது உம் எல்லாங் கொள்க. அங்ங்ணம் வாழ்த்தப்படும் 1. நாற்பாக்கும் வாழ்த்தியல்வகை உரித்து என இபையும்-நாற்பா என்னும் பெயருடன் குவ்வுருபு புணர்வழி நாற்பாக்கு எனச் சாரியையின்றிப் புணர்ந்தது. "நாற்பாக்கும்’ என்புழி உம்மை முற்றும்மை. நான்கு பாவினுக்கும் என்பது பொருள். நான்குபா வாவன ஆசிரியம் வஞ்சி வெண்பா கலியெனமுற்கூறப் பட்டன. 2. வாழ்த்தியல் என்ற அளவிலமையாது வாழ்த்தியல் வகை யென்றதனால் தேவரை வாழ்த்துதல், முனிவரை வாழ்த்துதல் ஏனையோராகிய மக்களை வாழ்த்துதல் என வாழ்த்தியலை மூவகையாகப் பகுத்துரைத்தார் இளம்பூரணர். 3. அறம் பொருள் இன்பம் எனப்படும் மும்முதற்கண், ஒருசார்ப்பொருள் களை வாழ்த்துதல் என்ற நெறியும் அடங்கும். அங்கனம் வரும் வாழ்த்தியற் பொருள் நால்வகைப்பாவிற்கும் ஒப்பவுரியதாகும் என இச்சூத்திரம் கூறுகின்றது. 4. 'வாழ்த்தியலென்னாது வகையென்றதனான், அங்ங்ணம் வாழ்த்துங்கால் தனக்குப் பயன்படுதலும் படர்க்கைப் பொருட்கு (உலகிற்குப்) பயன்படுதலுமென இருவகையான் வாழ்த்துமென்பதாஉம், இனி முன்னிலையாக வாழ்த்துதலும் படர்க்கையாக வாழ்த்துதலும் 6Tడir இருவகைப்படுமென்பது உம் எல்லாங்கொள்க' என இயைத்துப் பொருள் கொள்க. இவ்வுரைப்பகுதியினிடையே புள்ளியிட்ட இடத்தில் மேற்கூறிய மும்முதற்பொருளின் அறுவகையும் பெரும்பான்மையெனப்படுமென்பது உம்' என்ற உரைப்பகுதி காணப்படுகின்றது. இங்கு மும்முதற்பொருளின் அறுவகையும் பெரும்பான்மை"