பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/557

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - துரற்பா னரு குங்-ன் பொருளாவன: கடவுளும் முனிவரும் பசுவும் பாக்ப்பாரும் அரச ரும் மழையும் நாடுமென்பன. அவற்றுட் கடவுளை வாழ்த்துஞ் செய்யுள் கடவுள்வாழ்த்தெனப்படும். ஒழிந்த பொருள்களை வாழ்த்திய செய்யுள் அறுவகைவாழ்த்தெனப்படுமென்பது. "மாநிலஞ் சேவடி யாகத் துரநீர் வளைஞரல் பெளவ முடுக்கை யாக விசும்புமெய் யாகத் திசைகை யாகப் பசுங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக வியன்ற வெல்லாம் பயின்றகத் தடக்கிய வேத முதல்வ னென்ப திதற விளங்கிய திகிரி யோனே' (நற்றிணை.கடவுள் வாழ்த்து) என்பது தெய்வவாழ்த்து. "கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் மார்பி னஃதே மையில் துண்ஞாண். துதல திமையா நாட்டம் இகலட்டுக் கையது கணிச்சியொடு மழுவே மூவாய் வேலும் உண்டத் தோலா தோற்கே ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே செவ்வான் அன்ன மேனி அவ்வான் இலங்குபிறை அன்ன விலங்குவால் வைஎயிற்று எரியகைந் தன்ன அவிர்ந்துவிளங்கு புரிசடை முன் பக்கத் தொடர்ச்சி என்றது அறமுதலாகிய மூன்று பொருள்களின் நிலையும் நிலையின்மையுமாகிய அறுவகைப் பொருளாகக்கொண்டு பாடப்பெறுதலே பெரும்பான்மையென்பதும், வாழ்த்தியல்வகை சிறுபான்மையென்பது உம் இத்தொடரின் பொருளாகக் கொள்ளவேண்டியுளது. இனி, மும்முதற்பொருளின் அறுவகை, என்றது. அறம்பொருள் இன்பம் என்ற பொருளின்கண்வரும் அறுமுறைவாழ்த்தினை யெனக் கொள்வர் சி. கணேசஐயர் அது வாழ்த்தியற்பகுதிபற்றிய பின்வரும் உரைத்தொடர்களால் விரித்துரைக்கப்படுதலானும் செய்யுட்குரிய பொருள் வகைகளுள் பெரும்பான்மையும் இடம் பெறுவன மும்முதற்பொருளின் நிலையும் நிலையின்மையுமாகிய அறுவகைப்பொருட்பகுதிகளேயென்பது பேராசிரியர் கருத்தாதலானும் கடவுள் வாழ்த்து அறுவகை வாழ்த்தினுள் அடங்காமையின் அதனை அறுவகை.வாழ்த்தின் வேறாகப் பேராசிரியர் பிரித்துரைத்தலானும் மும்முதற்பொருளின் அறுவகையென்றது அறுவகை.வாழ்த்து ஆகாமையறிக.