பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருக.அ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் முதிராத் திங்களொடு சுடரும் சென்னி மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொன்முறை மரபின் வரிகிளர் வயமான் உரிவை தைஇய யாழ்கெழு மணிமிடற் றந்தணன் தாவில் தாள்நிழல் தவிர்ந்தன்றால் உலகே” (அகம், கடவுள் வாழ்த்து) என்பதும் அது. முன்னையது தனக்குப் பயன்பட வாழ்த்தி யது; பின்னையது உலகிற்குப் பயன்பட வாழ்த்தியது. பிற பாவி னும் மருட்டாவினும் பிற பொருட்கண் வந்த வாழ்த்து வந்துழிக் கண்டுகொள்க. வாழ்த்தென்பது அறமாகலின் அற முதலாகிய மும்முதற் பொருள்கள் (தொல்-செய்-106) என்புழி அடங்கும்பிற, இச் சூத்திரம் மிகையாலெனின், அற்றன்று; புறநிலைவாழ்த்து முதலியன உள; அவை நீக்குதற்கு இது விதந்தோதினானென் பது. வாழ்த்தியல்’ என்றதனான், இயற்கை வாழ்த்தெனப்படு வன இவையெனவும், இனிவரும் புறநிலைவாழ்த்து முதலியன இயற்கைவாழ்த்தெனப்படா: ஒருவகையான் வாழ்த்தின்பாற் சார்த்தி யுணரப்படுவதல்லதெனவுங் கொள்க. (கOக) நச்சினார்த்தினியம் : இது முற்கூறிய மும்முதற்பொருட்கண் அறமானது வாழ்த்துதற் பொருட்டுமாய் நாற்பாவிற்கு முரித்தாமென்கின்றது. (இ-ள்.) வாழ்த்தியலின் கூறுபாடு நான்குபாவிற்கு முரித்து. எ-று. 1. ஒருவரைவாழ்த்துதல் என்பது, அறத்தின் பாற்பட்டசெயலாதலின் அஃது அறமெனவேயடங்கும். வாழ்த்தியல் என வேறாகப்பிரித்துரைத்தல் மிகையென்னும் குற்றத்தின்படுமன்றோ என்பது இங்கு எழும் தடையாகும். இங்கு வாழ்த்தியல் வகை என்றது, அறமுதலிய மும்முதற்பொருளின் வேறென்ற கருத்திற் கூறப்பட்டதன்று. இயல்பாக வாழ்த்தும் இவ்வாழ்த்தின் வேறாகச் செயற்கைப்படுத்தி வாழ்த்தும் புறநிலைவாழ்த்து முதலியன உள. அவை ஒருவகையான் வாழ்த்தின்பாற் சார்த்தி யுரைக்கப்படுவதல்லது இயற்கைவாழ்த் தெனப்படா; இயற்கை வாழ்த்தாவன இவையே என்பது அறிவுறுத்துவார் "வாழ்த்தியல்' என இங்கு வேறுபிரித்து எடுத்துக் கூறினார் என்பது மேற்குறித்த தடையினையகற்றிப் பேராசிரியர் தரும் விடையாகும்.