பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எாசு ருசக வகையான் வாழ்த்தின்பாற் சார்த்தியுணரப்படுவதல்லது இயற்கை வாழ்த்தெனப்படா எனவும் கூறுவர் பேராசிரியர். எாக வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப் பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து 6)பாலி மின் என்னும் புறநிலை வாழ்த்தே கலிநிலை வகையும் வஞ்சியும் பெறiஅ. இசாம்பூரணம் : என்-எனின். இது புறநிலை வாழ்த்திற்குரிய பாவாமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) வழிபடு தெய்வம் நின்னைப் புறங்காப்பக் குற்றந் தீர்ந்த செல்வத்தொடு வழிவழியாகச் சிறந்து பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்துக் கலிப்பாவகையினும் வஞ்சிப்பா வகையினும் வரப்பெறாது என்றவாறு : எனவே வெண்பாவினும் ஆசிரியப்பாவினும் இவையிரண்டும் புணர்ந்த மருட்பாவினும் வரப்பெறும் என்றவாறாம். (கoகா) இது, நாற்பாக்கும் உரித்தன்றி வரையறைப்படும் வாழ்த்து வேறுபாடு உணர்த்துகின்றது. (இ-ஸ்.) நினக்குத் தொழுகுலமாகிய தெய்வம் நின்னைப் புறம் காப்ப, இல்லறம் முதலிய செல்வத்தாற் பழியின்றிப் பூத்த செல்வமொடு புதல்வர்ப்பயந்து, புதல்வரும் இப்பெற்றிய ராகி எல்லீரும் நீடுவாழ்விராமினென்று தெய்வத்தைப் புற நிறுத்தி வாழ்த்துவது புறநிலைவாழ்த்து. (அங்ங்னம் வாழ்த்திய அச். செய்யுள் கலிப்பா உறுப்பாகவும் வஞ்சிப்பாவினும் வருதலில்லை) (எ-று).* 1. தெய்வம் நின்னைப் புறங்காப்ப நீவிர் குற்றந்தீர்ந்த எல்லா ச் செல்வங்களும் பெற்றுச் சுற்றத்துடன் வழிவழி சிறந்து நெடுங்காலம் வாழ்மின் எனத் தெய்வத்தைப் பாதுகாவலாகப் புறத்தே நிறுத்தி வாழ்த்துதலின் இது புறநிலைவாழ்த்து என்னும் பெயர்த்தாயிற்று. 2. நால்வகைப்பாக்களுள் கலிநிலைவகையும் வஞ்சியும் ஆகியவிரண்டும் புறநிலை வாழ்த்துக்கு வரப் பெறா எனவே இவையொழிந்த வெண்பாவினும் ஆசிரியப்பாவினும் இவையிரண்டாலும் இயன்ற மருட்பாவினும் புறநிலை வாழ்த்து வரப்பெறும் என்றாராயிற்று.

  • . இவ்வுரைத்தொடர் உரை முற்றுப்பெறுதல்வேண்டிப் பின்னுள்ள உரைப்பகுதியினின்றும் சேர்க்கப்பெற்றது.