பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/562

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருச.உ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் தெய்வத்தைப் புறநிறுத்தி வாழ்த்துதலிற் புறநிலைவாழ்த் தாயிற்று. - "வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப” என்றோ தினமையின் வழிபடுதெய்வம் உள்வழியே புறநிலை வாழ்த்தெனப்படுவதென்பது. எடுத்துக்கொண்ட காரியத்துக்கு ஏதுவாகிய கடவுள் நிற்ப, அக்கடவுளாற் பயன்பெற நின்றானொரு சாத்தனை முன்னிலையாக்கி அவற்குக் காரியங் கூறு தவின் இது புறநிலையாயிற்று: அங்ங்ணம் வாழ்த்திய செய்யுள் கலிப்பாவுறுப் பாகியும் வஞ்சிப்பாவினும் வரப்பெறாதென்றான் என்பது; கவிநிலை வகை யென்றதனாற் கலிவகைத்தாகிய பரிபாடற்கும் இஃதொக்கும். இனிக் கடவுளாற் காக்கப்பட்ட சாத்தனை வாழ்த்தப்படானெனவுஞ் சொல்லுப; அற்றன்று, கடவுள் வாழ்த்தென்றால் அவ்வாறு பொருள் படாமையி னென்பது.? இவற்றுக்குச் செய்யுள்: "இமையா முக்க ணரிலங்குசுடர் பயந்த வுமையொரு பாகத் தொருவன் காப்பநின் பல்கிளைச் சுற்றமொடு நல்விதி னந்தி நீபல வாழிய வாய்வாட் சென்னிநின் னொருகுடை வரைப்பி னிழல் பெற்றுக் கிடந்த வெழுகட னாப்ப னகலிரு விசும்பின் மீனினும் பலவே' ானவும், - "திங்க விளங்கதிர்போற் றென்திங்க ளுர்த்தேவன் மைந்தர் சிறப்ப மகிழ்சிறந்து-திங்கட் 1. புறநிலைவாழ்த்து கலிநிலைவகையினும் வஞ்சிப்பாவினும் வாராது வே கலிவகைத்தாகிய பரிபாடற்கும் வாராதென்பது தானே பெறப்படும். நின்னால் வழிபடப்பெறுந் தெய்வம் நின்னைப் புறங்காப்ப நீ சுற்றத் ன் பொலிவு பெற்றுவாழ்வீராக’ என வாழ்த்தும் புறநிலைவாழ்த்துப்ற்குரியோன் , கடவுளாற் பயன்பெறநின்ற சாத்தனே முன்னமே கடவுளாற் பட்ட சாத்தன் புறநிலை வாழ்த்தால் வாழ்த்தப்படான் என்பார் சிலர். ாார் 'கடவுள் வாழ்த்து' என்பதற்குக் கடவுளால் வாழ்த்தப்பெறுதல்' :பாருள் கொண்டனர்போலும். தன்னால் வாழ்த்துப்பெறுவோனைக் காக்க எனக்கடவுளை முன்னிறுத்தி வாழ்த்தும் வாழ்த்தே புறநிலை தாதலின் கடவுளாற்காக்கப்பட்டோனையும் வழிபடு கடவுள் நிற்புறங் வழிவழிவாழ்க என வாழ்த்துதல் தவறாகாது என்பதாம். t ફ્રેં