பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குசச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் எடுத்துக்கொண்ட காரியத்துக்கு ஏதுவாகிய தெய். வத்தினைப் படர்க்கையாக்கி அத்தெய்வத்தாற் பயன்பெறா. நின்றா னொருவனை முன்னிலையாக்கிக் கூறலிற் புறநிலையாயிற்று. வகையென்றதனாற் கலியின் கூறாகிய பரிபாடற்கும் ஒக்கும். உ-ம். 'அறிதுயி லரவனை யமர்ந்தோன் காப்ப வருட்கடம் பூண்ட வகலாச் செல்வமொடு நீயுநின் புதல்வருஞ் சிறந்து வாழிய பெரும பூழியர் கோவே' "திங்க ளிளங்கதிர்போற் றேந்திங்க ளுர்த்தேவன் மைந்தர் சிறப்ப மகிழ்சிறந்து - திங்கட் கலைபெற்ற கற்றைச் சடைக்கடவுள் காப்ப நிலைபெற்று வாழியரோ நீ” எனவரும் இது பாவென்னுமுறுப்பிற்குப் பொருள் வரை. யறுத்தது. நின்னென ஒருமைகூறிப் பொலிமினெனப் பன்மை கூறியது, புதல்வரோடு கூடப் பாடுதற்கமையு மென்றற்கு. ஆய்வுரை : இது, புறநிலை வாழ்த்துக்குரிய பாவாமாறு கூறுகின்றது (இ-ஸ்) நின்னால் வழிபடப்பெறுந் தெய்வம் நின்னைப் புறங்காப்பக் குற்றந் தீர்ந்த செல்வத்தோடு வழிவழியாகச் சிறந்து பொலிமின் என வாழ்த்தும் புறநிலை வாழ்த்து, கலிப்பா வகையினும் வஞ்சிப்பாவினும் வருதல் இல்லை எ-று. தெய்வத்தைப் புறம் நிறுத்தி வாழ்த்துதலின் புறநிலை வாழ்த்து என்னும் பெயர்த்தாயிற்று தன்னால் வாழ்த்தப்பெறும் தலைவனைப் புதல்வரொடும் சுற்றத்தார் நண்பர் முதலியவர். களோடுங் கூட்டி வாழ்த்துதல் வாழ்த்தியல் மரபு என்றற்கு, “நின்புறங்காப்ப' என ஒருமை கூறிப் பொலிமின் எனப் பன்மை கூறினார். கலியும் வஞ்சியும் பெறா எனவே வெண்பாவினும் ஆசிரியப்பாவினும் இவ்விரண்டும் விரவிய மருட்பாவினும் இவ் வாழ்த்து வரும் என்பதாம். 1. புறநிலைவாழ்த்து என்பதற்கு நச்சினார்க்கினியர் தந்த விளக்கம். இது பேராசிரியரது உரையைத் தழுவியெழுதப்பெற்றதாகும். «* - \.:'»