பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருச.அ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் முன்னிலைக்கண் வருமேனும் இன்னகுணத்தையாவாயெனப் புகழ்பட வாழ்த்திப் பிற்கூறுதல் வேறுபாடுடைமையின் அதன் பின் செவியறிவுறு உக்கூறி இம்முறையே வைத்தார். இங்ங்னங் கூறிய பாவுறுப்பினை யுடைய நால்வகைச் செய்யுட்கும் இவ்வுறுப்பின திலக்கண மெய்துவிக்க. ஆய்வுரை : இஃது ஒரு சார் பொருட் குரியதோர் மரபு கூறுகின்றது. (இ-ஸ்) வாயுறை வாழ்த்தும் அவையடக்கியலும் செவியறிவுறுத்தற் பொருளும் கலிப்பாவிலும் வஞ்சிப்பாவிலும் வரப்பெறா எ-று. 邸<9° வாயுறை வாழ்த்தே வயங்க நாடின் வேம்புங் கடுவும் போல வெஞ்சொல் தாங்குதல் இன்றி வழிநளிை பயக்குமென் றோம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே. இனம்பூரண ம் : என் - எனின். வாயுறைவாழ்த்து ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) வாயுறை வாழ்த்தை விளங்க ஆராயின் வேம் பினையுங் கடுவினையும் போல வெஞ்சொ லடக்காது பிற்பயக்கு மெனக் கருதிப் பாதுகாவற் கிளவியானே மெய்யறிவித்தல் என்றவாறு.2 1. இவ்வுறுப்பினது இலக்கணமாவது, பாவாகிய இவ்வுறுப்பிற்குக் கூறப் பட்ட இலக்கணம். என்றது. ஆசிரியப்பாவும் வெண்பாவும் மருட்பாவும் எல்லா வாழ்த்திற்கும் உரியவாதலும் கலிப்பாவும் வஞ்சிப்பாவும் புறநிலை முதலிய நால்வகைப் பொருட்கும் உரியவாதலும் ஆகும். 2. வேம்புங்கடுவும்போல வெஞ்சொல் என்றது, வேம்பினையுங் கடுக். காயினையும் போன்று கேட்குங்கால் இன்னாததாய்க், கேட்டொழுகியபின் நலம்விளைக்கும்படி இடித்துரைத்தற்குரிய கடுஞ்சொல்லினை. வேம்பு கசப்புச் சுவையுடையது. கடு-கடுக்காய்; துவர்ப்புச் சுவையுடையது. தாங்குதல்-தடுத்தல்; என்றது, வெளிப்படக்கூறாது அடக்குதலை. தாங்குதலின்றி. எனவே அடக்காது வெளிப்படக்கூறி என்பதாம். வேம்புங் கடுக்காயும் உண்ணுங்கால் வெறுப்பினைவிளைப்பனவாயினும் உண்டபின் உடம்புக்கு நன்மைதருதல் போன்று, தீமையினைக் கடிந்துரைக்கும் வெஞ்சொல்லாகிய இடித்துரையும் குற்றங்களின் நீக்கிப் பிற்காலத்து நன்மையே பயக்குமாதலின் 'வேம்புங்கடுவும் போல வெஞ்சொல் என அடைபுணர்த்தோதினார். இங்ங்ணம் வெஞ்சொல் பிற்பயப்