பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா னஅ ருசகூ உதாரணம் 'இருங்கடல் உடுத்தஇப் பெருங்கண் மாநிலம்: உடையிலை நடுவன திடைபிறர்க் கின்றித் தாமே ஆண்ட ஏமங் காவலர் இடுதிரை மணலினும் பலரே சுடுபிணக் காடுபதி யாகப் போகித் தத்தம் நாடு பிறர்கொளச் சென்றுமாய்ந் தனரே அத்னால், நீயுங் கேண்மதி யத்தை வியா துடம்பொடு நின்ற உயிரும் இல்லை மடங்க லுண்மை மாயமோ அன்றே கள்ளி வேய்ந்த முள்ளியம் புறங்காட்டு வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண் உப்பிலாஅ அவிப்புழுக்கல் கைக்கொண்டு பிறக்குநோக்கா திழிபிறப்பினோன் ஈயப்பெற்று நிலங்கல னாக விலங்குபவி மிசையும் இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பக முழுதுடன் துறந்தே" (புறம். க.க. கி.) என்னும் பாட்டு. (*Осн) இது, முறையானே வாயுறைவாழ்த்துணர்த்துதல் துத் லிற்று. (இ - ள்.) முற்பருவத்துக் கைத்துப் பிற்பருவத்து உறுதி பயக்கும் வேம்புங் கடுவும்போல வெய்யவாய சொல்லினைத் தடையின்றிப் பிற்பயக்குமெனக் கருதிப் பாதுகாத்துக் கிளக்குங் முன் பக்கத் தொடர்ச்சி பனவாயினும் கேட்போர்க்கு இன்னாததாய் வெறுப்பினை விளைக்குமாதலின் அவ்வெறுப்புத்தோன்றாதவாறு அவர்கட்கு இனிமை பயக்கும் பாதுகாவற் சொல்லையும் உடன்கூட்டி மெய்யறிவித்து வாழ்த்துதலே வாயுறைவாழ்த்தாம் என்பார் ஒம்படைக் கிளவியின் வாயுறுத் தற்று' என்றார் தொல்காப்பியனார். வாயுறை என்பது வாய்மொழியாகிய மருந்து என விரியும். உறை-மருந்து. 1. இருங்கடற் றானையொடு பெருநிலங் கவைஇ' என்பது இளம்பூரணருரைப் பதிப்பிற் கண்ட பாடம்.