பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருரும் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் கிளப்பினான் மெய்யாக அறிவுறுத்துவது வாயுறை வாழ்த்தெனப் படும் (எ - று) : 'வாயுறை யென்பது மருந்தாகலான் 'வேம்புங் கடுவும் போல’ என்றானென்பது; அதற்குச் செய்யுள் : "இருங்கட லுடுத்த விப்பெருங்கண் மாநிலம் முந்நீர் வரைப்பக முழுதுடன் றுறந்தே" (புறம்.363) பிறவும் அன்ன. (ககஉ) நச்சினார் க்திணியம் : இது முறையானே வாயுறை கூறுகின்றது. (இ-ள்.) வேம்புங் ...சொல்.எ-து, முற்பருவத்துக் கைத்துங் கடுத்தும் பிற்பருவத்துறுதிபயக்கும் வேம்புங் கடுவும்போல வெய்யசொல்லினை. தாங்குதல் இன்றி ... பயக்குமென்று’ எ-து ஒருதடையின்றிப் பிற்பயக்குமெனக்கருதி. ஒம்படை... தற்றே. எ-து, பாதுகாத்த சொல்லினானே மெய்யாக உறுத்துவது. வாயுறை வாழ்த்தே எ-து, வாயுறை வாழ்த்தாம். στ-Ω!.4 உ-ம். இருங்கட லுடுத்தவிப் பெருங்கண் மாநிலம் முந்நீர் வரைப்பக முழுதுடன் றுறந்தே'5 (புறம்-ங் சுங்) எனவரும். ஆய்வுரை : இது, வாயுறை வாழ்த்து ஆமாறு கூறுகின்றது. 1. வேம்புங் கடுவும்போல வெஞ்சொல் முற்பருவத்திற் கசந்து பிற்பருவத்து உறுதிபயக்கும் என்றுகருதி அவற்றைத் தடுத்து அடக்காமல் பாதுகாக்குஞ்சொற்களால் மெய்ம்மையாக அறிவுறுத்துவது வாயுறை வாழ்த்தாகும். 2. வாயுறை என்பது வாய்மொழியாகிய மருந்தாகலின் அதற்கு ஆசிரியர் வேம்புங்கடுவும் போல' என எடுத்துக்காட்டுத்தந்தார் என்பதாம். 3. இப்பாடல் முழுவதும் இளம்பூரணர் உரையில் உள்ளது. 4. பேராசிரியர் உரையைத் தழுவியமைந்தது. 5. இப்பாடலை இளம்பூரணருரையிற்காண்க.