பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பாவாக குருக &. (இ, ள்) உண்ணுங்கால் முன்னே கசப்புடையதாகியும் துவர்ப்புடையதாகியும் உண்டபின் உடலுக்கு உறுதி பயக்கும் இயல்பினவாகிய வேம்பினையும் கடுக்காயினையும் போல வெம்மையுடைய சொல்லினைத் தடை செய்தலின்றிக் கேட்டோர்க்குப் பிற்காலத்து நற்பயன் விளைக்குமெனக் கருதிப் பாதுகாத்துக் கூறுஞ் சொற்களால் உண்மைப் பொருளை அறிவுறுத்துவது வாயுறை வாழ்த்து எனப்படும் எறு. வேம்பு - வேப்பிலை. சுடு கடுக்காய், கூறக்கேட்குங் காலத்துக் கைப்புடையதாய்த் தோன்றிக் கேட்டு அதன்வழி ஒழுகுவார்க்கு உறுதிபயக்குஞ் சொல் "வெஞ்சொல் எனப்பட்டது. தாங்குதல் இன்றி - நாம் கூறுவானேன் என எண்ணிச் சொல்ல வேண்டிய அறிவுரையை அடக்கிக் கொள்ளுதல் இன்றி. வழி - பிற்காலத்தில், நனி பயக்கும் என்று மிகவும் பயன்தரும் என்று கருதி. வாய் - வாய்மொழி. உறை - மருந்து. வாயுறை என்பது, சொல் மிருந்து (சொல்லாகிய மருந்து) எனப் பண்புத் தொகையாகும். இனி, வாய்க்கண் தோன்றிய மருந்து என வேற்றுமைத் தொகையும் ஆகும். மருந்து போறலின் மருந்தாயிற்று. 6f శ్రీథ్స్ அவையடக் கியலே அரில்தபத் தெரியின் வல்ல கூறினும் வகுத்தனர் கொண்மினென் றெல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே. இாைம்பூர னம் : என் - எனின். அவையடக்கியல் ஆமாறு உணர்த்துதல் நூத லிற்று. (இ - ள்) அவையடக்கியலைக் குற்றமற ஆராயின் அறியா தன சொல்லினும் பாகுபடுத்துக் கோடல்வேண்டும் என எல்லா மாந்தர்க்குந் தாழ்ந்துகறல் என்றவாறு1. உதாரணம் வந்தவழிக் கண்டுகொள்க. (கoக) 1. அரில் தபத் தெரிதல் குற்றம் அற ஆராய்தல். வல்லா-(எடுத்துக்கொண்ட பொருளை உள்ளவாறு) உணர்த்தவல்ல ஆற்றல் இல்லாத சொற்கள். வகுத்தனர் கொள்ளுதலாவது, சொற்றொடர்களின் மாற்றம் நோக்காது சொல்வாரது கருத்து நோக்கிப் பொருளை உள்ளவாறு பகுத்துணர்தல். அவையின்கண் உள்ளாரில் உயர்ந்தோர் ஒத்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடின்றி அவையிலுள்ளார் அனைவர்க்கும் தன் பணிவினைப் புலப்படுத்தலே அவையடக்கியலாம் என்பார், எல்லா மாந்தர்க்கும் வழி மொழிந்தன்று' என்றார். வழிமொழிந்தன்று-வழி