பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/574

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் அடங்குதலாயின் அவையடங்கியல் எனல் வேண்டும் என்டர் நச்சினார்க்கினியர், ாைம் செவியுறை தானே, பொங்குத லின்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடன்னனச் செவியுறுத் தன்றே. இனம் பூரணம் : என்-எனின். செவியறிவுறுஉ வருமாறு உணர்த்துதல் நுத விற்று. (இ - ள்) செவியுறையாவது பெரியோர் நடுவு வெகுட லின்றித் தாழ்ந்தொழுகுதல் கடன் எனச் செவியறிவுறுத்துதல் என்றவாறு, ! "அறிமின் அறநெறி, அஞ்சுமின் கூற்றம், பொறுமின் பிறர்கடுஞ்சொல், போற்றுமின் வஞ்சம் வெறுமின் வினைதீயார் கேண்மை, எஞ்ஞான்றும் பெறுமின் பெரியார்வாய்ச் சொல்' (நாலடி. கன உ} எனவரும், இத்துணையும் பாக்கட்குரிய பொருளுணர்த்தியது ? (ககo) பேராசிரியம் - . இஃது, இறுதி நின்ற செவியுறை யுணர்த்துகின்றது. (இ-ஸ்.) செவியுறை.செவிமருந்து, அதுவும் ஒப்பினாகிய பெயர் ; தானேயென நின்ற ஏகாரம் பிரிநிலை பொங்குத லின்றி பெருக்கமின்றி; (புரையோர் நாப்பண் அவிதல் கடன் எனச் செவியுறுத்தன்றே) பெரியோர் நடுவண் அடங்கி வாழ்தல் 1. செவியுறை - செவிவாயிலாகத் தரப்படும் மருந்து. பொங்குதல் - வெகுளுதல். புரையோர் - உயர்ந்தோர். தாப்பண் - நடு, அவிதல் அடங்கியொழுகுதல். செவியுறுத்தன்று - செவியறிவுறுத்தியது. 2. எரு ஆம் சூத்திரம் முதல் ளய - ஆம் சூத்திரம் முடிய இவ்வளவும் பாக்களில் இடம்பெறுதற்குரிய பொருள்களின் வகை உணர்த்தப்பெற்றது என்பதாம். 3. பொங்குதல்-பெருக்கம்; என்றது, தான்பணியவேண்டுமிடத்துப் பணி பாது தன்னுயர்வுபுலப்படத் தருக்கிநிற்றல்.