பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/575

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பால் ருகுரு கடப்பாடெனச் சொல்விச் செவிக்கணறிவுறுத்துவது செவியறிவு நூஉ (எ-று) . அஃது அடங்கி வாழ்வார்க்குப் புகழாதலான் வாழ்த்தின் பாற்பட்டது? அதற்குச் செய்யுள் : "வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்" (புறம் 6) என்பதனுள், “பணியிய ரத்தைநின் குடையே முனிவர் முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே யிறைஞ்சக பெருமதின் சென்னி சிறந்த நான்மறை முதல்வ ரேந்துகை யெதிரே (புறம் 6) எனவும், “என்றும். இன்சொல் வெண்பதத்தை யாகுமதி பெரும” எனவும், (புறம்.40) "பணிவுடைய னின்சொல னாத லொருவற் கணியல்ல மற்றுப் பிற” (குறள் 10: 5) எனவும் வரும். இத்துணையும் பாவினது பெயரும் முறையும் எண்ணும் பொருட்கு உரியவற்றுக்கண் வரையறையுங் கூறியவாறு.ே (ககச} நச்சினார்க்கினியம் : இது முறையே செவியுறை கூறுகின்றது. (இ-ள்.) செவிமருந்து போறலிற் செவியுறை யென்றார்.4 பெருக்க மின்றிப் பெரியோர் நடுவண் அடங்கி வாழ்தல் கடப் 1. புரையோர். உயர்ந்தோர். நாப்பண்-நடு. செவியுறுத்தன்று. செவியறி வுறுத்தியது. 2. செவியறிவுறுத்தவண்ணம் அடங்கியொழுகுவார் புகழுடன் வாழ்வராதலால் செவியறிவுறு.உ வாழ்த்தின்பாற்பட்டது. 3. இவ்வியல் 105 ஆம் சூத்திரத்திரம் முதலாக 114ஆம் சூத்திரம் இறுதியாக இதுவரையும் பாவென்னும் உறுப்புப்பத்தி அவற்துை பெயர், அவை நின்றமுறை, பாவின்தொகை, அவை பொருட்கு உரியவாம் நிலைக்கண் அமைந்தவரையறை ஆகியன கூறப்பட்டன என்பதாம். 4. உறை-மருந்து. செவி வாயாக நுகருமருந்தாகவின் செவியுறையென்னும் பெயர்த்தாயிற்று.