பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/578

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருரு.அ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் &is ris & towart : இதுவும், மேனின்ற அதிகாரத்தாற் பாவிலக்கணமே கூறு கின்றது. (இ - ள். ஒத்தாழிசைக்கலியின் கண்ணும் மண்டிலயாப்பின் கண்ணுங் குட்டம் வருங்கால் அளவடிக்குப் பொருந்தி வருந் தத்தம் பாக்கள் (எ று) பாவென்பது அதிகாரத்தாற் கொள்ளப்படும். ஒத்தாழி சைக்கலி அளவடியுஞ் சிந்தடியும் குறளடியும் விராய்நிற்கு. மாயினும் அளவல்லாவடியேனும் அளவடிக்குப் பொருந்து மாற்றாற் பாக் கொளுத்தப்படுமென்பது. "அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்’ (கலி.11) என அளவடிக்கண் துள்ளலோசை வந்தது. போரவுணர்க் கடந்தோய்நீ புணர்மருதம் பிளந்தோய்நீ” (விளக்கத்தனார் பாடல்.) எனக் குறளடிக்கண்ணும் அவ்வாறே துள்ளலோசை வந்தவாறு கண்டுகொள்க, "நீரின் றண்மையுந் தீயின் வெம்மையுஞ் சாரச் சார்ந்து தீரத் தீருஞ் சார னாடன் கேண்மை சாரச் சாரச் சார்ந்து தீரத் தீரத் தீர் பொல் லாதே' என இஃது இடையடி குறைந்தமையிற் குட்டமெனப்பட்டது. நாற்சீரடி யாத்து வருவன மண்டில யாப்பெனப்படும். அவை போலக் குட்டமும் நேரடிக்குப் பாப்பொருந்தின, (எ று).

முன் பக்கத் தொடர்ச்சி சொல்லும் நாற்சீரடியிற் குறைந்து வருவனவாதலின் இவற்றைநீக்கி நாற்சீரடி யால் வருவன ஒத்தாழிசையும் குட்டமும் என வேறுபிரித்தோதவேண்டியதா யிற்று என்பது கருத்து. 1. குட்டம் என்பது, நாற்சீரடியிற்குறைந்து முச்சீரானும் இருசீரானும் வருவது. ஒத்தாழிசைக்கலி அளவடி சிந்தடி குறளடி என்பன கலந்து நிற்பினும் அளவடியல்லாதவடிகட்கு அளவடிக்கு ஏற்பப் பா என்னும் உறுப்பு பொருத்தப் பெறும் என்பதாம்.