பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா டி. ருகண்க. (இ ள்) மேற்கூறப்பட்ட (முச்சீரடியாகிய) குட்டம் ஒரு 1.ாட்டின் இடையே வருதலன்றி ஈற்றயலடிக்கண்ணே :ே( தி லும் உண்டு எ-று ஈண்டு எருத்து என்றது தரவை: அஃது எருத்தே கொச்சகம் (செய்-146) என்பதனான் உணர்க' என்பர் நச்சினார்க்கினியர், இங்கு எருத்து என்னாது எருத்தடி' என ஆசிரியர் கூறுதலால் ஈற்றயலடி எனப்பொருள் கொள்ளுதலே ஏற்புடையதாகும். ளம் கூ மண்டிலங் குட்டம் என்றிவை இரண்டும் செந்துக் கியல என்மனாக் புவைக். இனம் பூரணம் : என்-எனின். மேற் சொல்லப்பட்டவற்றுள் மண்டிலம் குட்டம் என்பவற்றிற்குரியதோர் ஒசை வேறுபாடு உணர்த்துதல் துதலிற் று. (இ - ள்) மண்டிலமாகக் கூறப்படும் பாவும் குட்டமெனக் கூறப்படும் பாவும் அகவலோசை இயல என்றவாறு, உதாரணம் முன்னர்க் காட்டுதும். இனி நான்குடாவினும் வெண்பாவுங் கலிப்பாவும் முன்னெடுத் தோதுகின்றாராதலாலும், ஆசிரியப்பாவும் வஞ் சிப்பாவும் இத்துணையும் ஒதிய இலக்கணத்தான் முடித்தலானும்? அவையிற்றிற்கு உதாரணம் ஈண்டே காட்டுதும். ஆசிரியப் பாவாவது பெரும்பான்மை இயற்சீரானும் ஆசிரிய வுரிச்சீரானும் ஆசிரியத்தளையானும் அகவலோசையானும் நாற்சீரடியானும் சிறுபான்மை ஒழிந்த சீரானும் தளையானும் அடியானும் வரு வது அவ்வாறாதல் மேற்கூறப்பட்ட சூத்திரங்களான் உணர்க. இப்பாவிற்கு ஈற்றெழுத்து வரையறுத்துணர்த் தாமையின் எல்லா வீறுமாம், எற்றுக்கு? 1. முன்னெடுத்தோதுகின்றார்-பின்னர் எடுத்துக்கூறுகின்றார். 2. இதுவரை கூறிய இலக்கணத்தால் ஆசிரியப்பாவின் இயல்பும் வஞ்சிப். பாவின் இயல்பும் கூறிமுடித்தார் ஆசிரியர் என்பதாம். 3. ஆசிரியப்பா என்பது பெரும்பான்மை இயற்சீராலும் ஆசிரியவுரிச்சீராலும் ஆசிரியத்தளையாலும் அகவலோசையாலும் நாற்சீரடியாலும் சிறுபான்மை ஒழிந்த சீராலும் தளையாலும் அடியாலும் வரும். தொல்காப்பியனார் பிற். காலத்தார் போன்று இப்பாவிற்கு ஈற்றெழுத்து வரையறுத் துணர்த்தாமையின் எல்லா வீறும் ஆகும்.