பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/589

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ! இது. ருக்கடி 'பூந்தாமரைப் போதலமரத் தேம்புனலிடை மீன்திரிதரும் வளவயலிடைக் களவயின் மகிழ் வினைக்கம்பலை மனைச்சிலம்பவும் மனைச்சிலம்பிய மனமுரசமும் வயற்கம்பலைக் கயவார்ப்பவும், நாளும் மகிழின் மகிழ்தூங் கூரன் புகழ்தல் ஆனாப் பெருவண் மையனே.” (யாப். வி. ப. க.க சு) இது குறளடியான் வந்து தனிச்சொற்பெற்று ஈற்றயலடி முச் சீரான் வந்தது. ஆசிரியச் சுரிதகத்தாவிற்ற இருசீரடி வஞ்சிப்பா தனிச்சொற்பெறுதல் எடுத்தோதிற்றிலராயினும் உரையிற். கோடல் என்பதனாற் கொள்க. “கொடிவாலன கருநிறத்தன குறுந்தாளன வடிவாளெயிற் றழலுளையன வள்ளுகிரன. பனையெருத்தின் இணையரிமான் அணையேறித் துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி எயில் நடுவ ணினி திருந் தெல்லோர்க்கும் பயில்படுவினை பத்தியவாற் செப்பியோன், -புனையெனத் திருவுறு திருந்தடி திசைதொழ வெருவுறு நாற்கதி வீடுநரிை எளிதே.” (யாப். வி. பக் க.க. எ) இது முச்சீரடி வஞ்சிப்பா. இனி, 'வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய (தொல்.செய்.உக) 1. தொல்காப்பியம் செய்யுளியல் ம்சு,உம்,உக, சங்,சரு.ச.அ. ஆம் சூத்திரங்களில் வஞ்சிப்பாவின் இலக்கணம் உணர்த்தப்பெற்றது. வஞ்சியுரிச் சீரானும் ஏனைச்சீரானும் இருசீரடியானும் முச்சீரடியானுந் தாங்கலோசையானும் வந்து தனிச் சொற்பெற்று ஆசிரியச் சுரிதகத்தான் முடிவது வஞ்சிப்பா வாகும். இப்பா இருசீரடிவஞ்சிப்பா, முச்சீரடிவஞ்சிப்பா என இருவகைப்படும். ஆசிரியச் சுரிதகத்தால் முடியும் குறளடிவஞ்சிப்பா தனிச்சொற்பெறுதல் தொல் காப்பியராற் கூறப்படாது போயினும் உரையிற்கோடலாற் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர்.