பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/591

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா . " శ్రో ബ് (யா, வி. சூ. 73.4). நின்றவாறு நிற்றலும் அடிமறித்துக் கொள் ளினும் பொருள் திரியாது நிற்றலுமுடைய வென்பது போலும் அவர் கருத்து. அடிமறித்தல் பொருள் கோட்பகுதியாகவான் அஃதமையும்; அங்ங்னங் கொள்ளின் நிரனிறை முதலிய பொருள் கோட்பகுதியானுஞ் செய்யுள் வேறுபடுமென மறுக்க. இனிக் குட்டமும் இருவகைத்தென்ப, இணைக்குறள் சிரியப்பா, நேரிசை யாசிரியப்பாவென: அவை அவ்வாறு கொள்ளின் (டா வி. கு 71-2) இழுக்கென்னை? "குட்ட மெருத்தடி யுடைத்து மாகும்’ (தொல் செய்.16) என்று இருவகையாற் கூறினமையி னென்றலுமொன்று; இனி ஒன்றாக வழங்குதலே வலியுடைத்து . 'குட்ட மெருத்தடி யுடைத்து மாகும்' என ஒருமை கூறியவதனான் ஒழிந்தவழி இரட்டித்துக் குறைய வேண்டுமென்பது கொள்க. மற்று, 'ஒத்தா ழிசையும் மண்டில யாப்பும்’ (தொல் செய்-115) என்ற வழிக் கலிப்பா, முற்கூறியதென்னையெனின், குட்டம் ஆண்டுப் பயின்று வருதலின் ஆசிரியத்திற்கும் அதனை முற் கூறினான்; இனி, முறையானே வெண்டாக் கூறுமென்பது குட்டமென்பது வழக்குச்சொல்லாற் செய்த செய்வுனென் பாருமுளர் நாற்சொல்லானுமன்றிச் செய்யுள் செய்யப்படாமை யின் அது குட்டமென்றல் நிரம்பாது. ஒத்தாழிசையென்பது எல்லாச் செய்யுண் மேலுஞ் செல்லுமெனவும் உரைப்ப; பாவும் இனமுமெனப் பகுத்துரைப்பார்க்காம் அது பொருளாவதென மறுக்க: அல்லதுாஉம் ஒரோவொன்றே வருவது ஒத்தாழிசை யெனப்படாவென்பது 8 செந்துக்கென்பது ஆசிரிப்பாவென்ற 1. இணைக்குறளாசிரியப்பா, நேரிசையாசிரியப்பா என்னும் இரண்டினையும் 'குட்டச்செத்து க்கு' என ஒன்றாக வழங்குதலே வலியுடையதாகும். 2. இனிக் குட்டம் என்பது வழக்குச் சொல்லாற் செய்யப்பட்ட செய்யுள் என்பாருமுளர். செய்யுளிட்டச்சொல் எனப்படும் நாற்சொல்லாலுமன்றி வழக்குச் சொல் ஒன்றே பற்றிச் செய்யுள் செய்யப்படாமையின் வழக்குச்சொல்லால் இயன்ற அதனைக் குட்டம் என்றல் நிறைவுடைய இலக்கணமாகாது. 3. ஒத்தாழிசை என்பது நால்வகைச்செய்யுள்மேலும் செல்லும் என்பாருமுளர். அக்கூற்றும் பாவும் இனமும் பகுத்துரைப்பார்க்கேபொருந்தும். பாவினப் பகுப்பில்லாத இயற்றமிழ்ச்செய்யுட்கு அது பொருந்தாதென மறுக்க. அன்றியும்