பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/593

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ளம்ச مبسمسمب-oمد ருள்க. (இ- ள்) நெடுவெண்பாட்டு முதலாக அங்கதச்செய்யுள் ஈறாகச் சொல்லப்பட்டவையும் அளவொத்தவையும் எல்லாம் வெண்பா யாப்பினை யுடைய என்றவாறு, வெண்பா யாப்பாவது, வெண்சீரானும் இயற்சீராலும் வெண் டளையானும் செப்பலோசையானும் அளவடியானும் முச்சி. ரீற்றடியானும் வருவது. இவற்றிற்கு இலக்கணம் மேலோதப்பட்டது. ஈண்டு ஒதப் பட்டன வெல்லாம் இவ்வாறு வரும் என்றவாறு. இவையெல்லாம் ஒசையான் ஒக்குமாயினும் அளவானுந் தொடையானும் பொருளானும் இனத்தானும் வேறுபடுத்திக் குறியிடுகின்றார் என்றுகொள்க. நெடுவெண் பாட்டாவது அளவடியி னெடிய பாட்டு, குறுவெண்பாட்டாவது அளவடியிற் குறிய பாட்டு,2 கைக்கிளையென்பது உம் அங்கதமென்பது உம் பொருளானாகிய பெயர். பரிபாட்டாவது பரிந்த பாட்டாம். அஃதாவது ஒரு வெண்பாவாக வருதலின்றிப் பலவுறுப்புக்களோடு தொடர்ந்து ஒரு பாட்டாகி முற்றுப் பெறுவது. ஒத்தவை' என்பது அளவானும் பொருளானும் இனத்தானும் வேறுபடுக்கப்படாத சமநிலை வெண்பாக்களாம். அவையாவன நான்கடியான் வருவன. இவ் வாசிரியர் நான்கினை அளவென்றும் ஏறினவற்றை நெடிலென் றும் குறைந்தவற்றைக் குறள் சிந்து என்றும் வழங்குவராகவின். இவற்றுள் பொருளானும் இனத்தானும் வேறுபடுக்கப்படாத நெடுவெண்பாட்டும் குறுவெண்பாட்டும் சமநிலை வெண்பாட்டும் என மூவகையானும் வரும். 1. இங்கு அளவு என்றது. நான்கு அடியினை: நாற்சீரான் இயன்றது அளவடியென்றாற்போன்று நாலடியான் இயன்றபாட்டும் அளவெனப்பட்டது. 2 உரையில் அளவடியினெடியபாட்டு அளவடியிற்குறியபாட்டு’ என்பன முறையே அளவினெடியபாட்டு அளவிற்குறியபாட்டு என்றிருத்தல் பொருத்தமாகும். so 8. பரிந்தபாட்டு பரிபாட்டு எனப்பட்டது. பரிதல்-சுமத்தல்; வெண்பாவாகிப் பலவுறுப்புக்களையும் தாங்கிவருதலின் பரிபாட்டென்னும் பெயர்த் தாயிற்று.