பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/594

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருவாச தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் குறுவெண்பாட்டாவது இரண்டடியானும் மூன்றடியானும் வரும். உதாரணம் : "அறத்தா றிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானொ ர்ேந்தான் இடை.' (குறள். எ) இஃது இரண்டடியும் ஒருதொடையான் வருதலின் குறள் வெண்பா என்ப. 'உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க் கச்சாணி அன்னார் உடைத்து.” (குறள், காகா எ) இது விகற்பத்தொடையான் வருதலின் விகற்பக்குறள் வெண்பா என்ப. மூன்றடியான் வருவதனைச் சிந்தியல் வெண்பா எனவழங்கப் படும். “நறுநீல நெய்தலும் கொட்டியுந் தீண்டிப் பிறர்நாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி பறநாட்டுப் பெண்டிர் அடி. (யாப். வி. பக். உஉசு) இஃது ஒத்து ஒருதொடையான் வருதலின், இன்னிசைச் சிந்தியல் வெண்பாவாம். 'நற்கொற்ற வாயில் நறுங்குவளைத் தார்கொண்டு சுற்றும்வண் டார்ப்பப் புடைத்தாளே- பொற்றேரான் பாலைநல் வாயில் மகள்' (யாப் வி. பக். உ.உகr} எனவும், “சுழையார அம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் கனை’’ (யாப். வி. பக். உஉகூ} எனவும் இவை வேறுபட்ட தொடையான் வருதலின் நேரிசைச் சிந்தியல் வெண்பாவாம். இனி நான்கடியான் வருவன சமநிலை வெண்பா வெனப்படும். அவற்றுள் இரண்டாமடியின் இறுதிக்கண் ஒரு உத்தொடை பெற்று வருவனவற்றை நேரிசை வெண்பா எனவும், ஒரு உத்தொடை பெறாது வருவன வற்றை இன்னிசை வெண்பா எனவும் வழங்கப்படும். ஒருஉத்தொடை வருக்கவெதுகையாகியும் வரும். இவையெல்லாம் உரையிற் கோடல் என்பதனாற் கொள்க.