பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருன்சு தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் இஃது ஆறடியான் வந்து ஒரு உத்தொடை பெறுதலின்

  • :ে

நேரிசைப் பஃறொடை வெண்பா. 'சிற்றாறு பாய்த்துகளுஞ் சேயரிக் கண்ணினாய் வற்றா வளவயலும் வாய்மாண்ட ஏரியும் பற்றார்ப் பிணிக்கு மதிலும் படுகிடங்கும் ஒப்ப வுடைத்தா ஒலியோவா நீர்ப்புட்கள் தத்தி இரைதேருந் தையலாய் நின்னூர்ப்பேர் ஒத்துனரும் வண்ண முரைத்தி யெனக்கூறக் கட்டலர் தாமரையுள் ஏழுங் கவிமான்றேர்க் கத்திருவர் ஐவருங் காயா மரமொன்றும் பெற்றவழி தேர்ந்துண்ணும் பேயின் இருந்தலையும் வித்தாகா நெல்லின் இறுதியும் பெற்றக்கால் ஒத்தியைந்த தெம்மூர்ப்பேர் போலென்றாள் - வானவன் கை விற்பொலிந்த வெம்புருவத் தாள் (யாப் வி.பக்.உங் எ) இது பன்னிரண்டடியான் (பெருவல்லத்தைக் கூற) வந்த இன்னிசைப் பஃறொடை வெண்பா.1 ஏனையவும் வந்தவழிக் கண்டுகொள்க. இவற்றுள், “ஒருபொருள் நுதலிய வெள்ளடி இயலால் திரியின்றி முடிவது கலிவெண்பாட்டே' (தொல்,செய்.எச எ) 1. இாண்டடியாய் ஒரெதுகைத்தொடையால் வருவது குறள்வெண்பா எனவும், எதுகையின்றி விகற்பத்தொடையால் வருவது விகற்பக்குறள் எனவும் வழங்கப்படும். மூன்றடியாய் வருவது சிந்தியல் வெண்பா. அவற்றுள் ஒத்து: ஒருதொடையால் வருவது இன்னிசைச் சிந்தியல்வெண்பா எனவும், வேறுபட்ட தொடையால் வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா எனவும் வழங்கப்படும். நான்கடியாய் வருவது சமனிலை வெண்பா. அவற்றுள் இரண்டாமடியின் இறுதி யில் ஒரூஉத்தொடை (தனிச்சொல்) பெற்றுவருவது நேரிசைவெண்பா எனவும், ஒரூஉத் தொடை (தனிச்சொல்) பெறாது வருவது இன்னிசை வெண்பா எனவும் வழங்கப்படும். ஐந்தடி முதல் பன்னிரண்டடி வரை வருவன பஃறொடை வெண்பா. இவற்றுள் ஒருஉத்தொடை (தனிச்சொல்) பெற்றுவருவன நேரிசைப்பஃறொடை எனவும் ஒரூஉத்தொடை (தனிச்சொல்) இன்றிவருவன இன்னிசைப் பஃறொடை என்வும் வழங்கப்படும்.