பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா )ச ருஎன என ஒதினமையாற் புணர்தல் முதலாகிய பொருள்களுள் யாதா னும் ஒருபொருளைக் குறித்துத் திரிபின்றி முடியும் பஃறொடை வெண்பாவினைக் கலிவெண்பா எனவும், குறள்வெண்பா முதலாகிய எல்லா வெண்பாக்களுங் கொச்சகக்கலிக்கு உறுப்பாய் வரிற் கொச்சகம் எனவும், பரிபாடற்கு உறுப்பாய் வரிற் பரி பாடலெனவுங் கொள்ளப்படும். கைக்கிளை என்பது கைக்கிளைப் பொருண்மை. மேற்சொல்லப்பட்ட வெண்பாக்கள் இப்பொருள்மேல் வரிற் கைக்கிளை வெண்பா எனப்படும். 'பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபேர் உன்னேனென் று.ழுலக்கை பற்றினேற்-கன்னோ மனனோடு வாயெல்லாம் மல்குநீர்க் கோழிப் புனல்நாடன் பேரே வரும்.” (யாப். வி. பக். கூஉ) கைக்கிளை வெண்பா யாப்பினால் வரும் எனவே, ஆசிரியப் பாவினால் வரப்பெறாதென்பதும், வந்ததேயாயினும் பாடாண் பாட்டுக் கைக்கிளை யாகுமெனவும் கொள்ளப்படும். பரிபாட்டும் அங்கதமும் தத்தஞ் சிறப்புச் சூத்திரத்துட் சொல்லுதும். (எம்.ச)

யாதானும் ஒருபொருளைக்குறித்துத் திரியின்றி முடியும் பஃறொடை வெண்பா கலிவெண்பா எனக் கலிப்பாவகையுள் வைத்து எண்ணப்பெறும் என்பது! ஒருபொருள் துதலிய வெள்ளடி யியலாற் றிரியின்றி முடிவது கலிவெண் பாட்டே’ (செய்-ளசஎ) என இவ்வியலிற் பின்வரும் சூத்திரத்தால் விரித்துரைக்கப்பெற்றது. இங்குக் கூறப்பட்ட குறள்வெண்பா முதலிய எல்லா வெண்பாக்களும் கொச்சகக் கலிக்கு உறுப்பாய் வரிற் கொச்சகம் எனவும், பரிபாடற்கு உறுப்பாய் வரிற் பரிபாடல் எனவும் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். 2. கைக்கிளை என்பது ஒருதலைக் காமமாகிய ஒழுகலாறு. இப்பொருள். பற்றி மேற்சொல்லப்பட்ட வெண்பாக்கள் வரின் அவை கைக்கிளை வெண்பா என வழங்கப்படும். கைக்கிளைப் பொருண்மை வெண்பா யாப்பினால் வரும் என எடுத்தோதவே அப்பொருண்மை ஆசிரியப்பாவினால் வரப்பெறாதென்பதும், ஒருகால்வரின் அது பாடாண்பாட்டுக்கைக்கிளை யெனப்படும் எனவும் விளக்கந்தருவர் இளம்பூரணர்.