பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா வால்ச ருவாக வரினுங் கலிப்பாவின்பாற் படுமென்பது பரிபாடலுஞ் சிற்றுறுப்பு வகையான் ஒப்புமையுடையவென்பது கொள்க. அல்லது உங் குறுவெண்பாட்டும் நெடுவெண்பாட்டும் பலவாகியும் ஒன்றாய் அடங்குமென்பது உமாம். இனி, அல்லாதார் வெண்பாவினை ஐந்தெனவுஞ் சொல்லுப. அவை தனிச்சொற் பெற்றும் பெறாதும் வருமெனவும் அவ்வாறு வருங்கால் ஈற்றடி ஒழித்து எல்லாந் தனிச்சொற்பெறுதலும் அவற்றை ஒன்றொன்றனோடு பரிமாற்றித் தனிச்சொற் கொடுத்து உறழ்வனவுமாகிப் பலவாமென்பது. அங்கதச்செய்யுளென்பது பண்புத்தொகை: உம்மைத் தொகையென்பார், செய்யுளென்பதும் வேறென்ப அதற்கு விடை முன்னர்ச் சொல்லுதும்; எல்லாம் வெண்பா யாப்பின’’ என்பதனை, செயற்படுத்தவற்றுள் அங்கதமுங் கைக்கிளையும் மற்றைப் பாக்களும் உறுப்பாக வருமென்பதுபடும். (ககஅ) 1. கைக்கிளைச் செய்யுள் வெண்பாவுறுப்பின்ால் வரினும் பொருள் வகையாற் கவிப்பாவின் பாற்படும் என்பதும், பரிபாடலுஞ் சிற்றுறுப்பு வகையால் வெண்பாவுறுப்பினோடு ஒப்புமையுடைய வென்பதும், குறுவெண்பாட்டும் நெடு வெண்பாட்டும் பலவாகி வந்து ஒருபாட்டாய் அடங்கும் என்பதும் இச்சூத்திரத் தின் பயன் என்பர் பேராசிரியர். 2. அல்லாதார் என்றது, தொல்காப்பியனார்க்குக் காலத்தாற்பிற்பட்ட யாப்பிலக்கண நூலாசிரியன்ர. குறள்வெண்பா, சிந்தியல் வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா, பஃறொடைவெண்பா என வெண்பா ஐந்து வகைப்படும் என்பர் பிற்கால யாப்பிலக்கண நூலாசிரியர்கள். ' குறள்சிந் தின்னிசை நேரிசை பஃறொடை எனவைந் தாகும் வெண்பாத் தானே. (58) என்பது யாப்பருங்கலம், குறள் வெண்பாவினை ஒரடிமுக்கால் என்றும், சிந்தியல் வெண்பாவினை ஈரடி முக்கால் என்றும், நேரிசை வெண்பாவினை நேரிசை மூவடி முக்கால் என்றும், இன்னிசை வெண்பாவினை இன்னிசை மூவடி முக்கால் என்றும், பஃறொடைவெண்பாவினைப் பலவடி முக்கால் என்றும் வழங்குவர் ஒருசாராசிரியர். செப்பலோசையிற் சிதைந்த பஃறொடை வெண்பாவினைக் கலிவெண்பா வெனவும் அல்லாத வெண்பாக்களது சிதைவினை ஒருபுடையொப்புமை நோக்கித் தத்தம் இனமாகவும் வழங்கப்படும் எனவும் கூறுவர் யாப்பருங்கலவுரையாசிரியர். 3. அங்கதமாகிய செய்யுள் என விரியும். அங்கதம் - வசை. 4. உம்மைத்தொகையாகக்கொண்டு அங்கதமும் செய்யுளும் என உம்மை விரித்துரைப்போர் செய்யுள்' என்பதனை ஒருவகைச் செய்யுள் வகையினைக் குறித்த பெயராகக் கொள்வர்.