பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ச ஆ இ. ড়ে ওঁ ওঁ কয় স্ট্র রুক্তf : இது தனிக்குறிலானாகிய நேரசைப்பின்னும் இருவகை உகரம் வந்து நேர்பசையாதலை விலக்கினமையான் எய்தியதுவிலக்கியது.ாஉமாம். குற்றுகரங் குற்றெழுத்துப்போன்று அலகுபெறுமென்றமையின் எய்தாதது எய்துவித்து வழுவமைத்தது உமாம். (இ-ள்.) குற்றெழுத்தோடிணைந்த குற்றியலுகரமும் முற்றியலுகரமும் அல்லாதவிடத்தே முற்கூறிய நேர்பசையாவன; எனவே குற்றெழுத்தோடிணைந்த குற்றியலுகரமும் முற்றியலுகரமும் வந்துழி நிரையசையாம். (எ-று.) இனி, 'உடம்பொடுபுணர்த்தல்’ என்பதனாற் குறிலிணை. யெனக் குற்றுகரத்தையும் குற்றெழுத்தென வேண்டினமை பெற்றாம். உ-ம்: ஞாயிறு வலியது என ஒரசைப்பின்னர் வருகின்ற குறிற்பின்வந்த குற்றுகரம் குற்றெழுத்துப் போன்று குறிலிணையுகரமாய் அலகுபெற்றதேனும் குற்றுகரமே யென்று இலக்கண மல்லதோர் வழுவமைத்தவாறு. இங்ங்ணம் குற்றுகரம் எழுத்தளபெஞ்சுமெனவே, 'குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கி னொற்றிய நகரமிசை நகரமொடு முதலும்” (எழுத். மொழி. 34) என விதித்த நுந்தையென்னும் முதற்கட் குற்றுகரம், எழுத்தளபெஞ்சிக் குற்றெழுத்துப் போன்று அலகுபெறுதலுங் கொள்க.2 கரு, மழு இவை முற்றுகரநிரையசையாம். ஆய்வுரை : இதுவும் அசைவகை யுணர்த்துகின்றது. (இ-ள்) மேற்கூறப்பட்ட நேர், நிரை என்னும் இரண்டசையும், குற்றியலுகரம் முற்றியலுகரம் என்பவற்றுள் ஒன்றினை இறுதியிற் பெற்றுப் பிளவுபடாது ஒருசொற்றன்மையெய்திவரின், 1 . இநடுத்தோடு இணைந்த நிலையிற் குற்றியலுகரத்தையும் குறிலினையுகரம்’ எனக் குற்றெழுத்தாக ஆசிரியர் உடன்பட்டுரைத்தலால் குற்றியலுகரத்தையும் குற்றெழுத்தெனக் கொண்டமை புலனாகும். 2 . எனவே நுந்தை” என்னும் மொழிமுதற் குற்றியலுகரமும் எழுத்தளபு எஞ்சிக் குறைந்த ஒசையது ஆயினும் குற்றெழுத்துப்போன்று அலகு பெறும் என்பது இதனாற்கொள்க என்றாராயிற்று.