பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருஅம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் இது வெண்பாவென்னு முறுப்பினை இன்னுழியாமெனப் பொருளுஞ் செய்யுளும்பற்றி வரையறுக்கின்றது. (இ-ஸ்.) முற்கூறிய நெடுவெண்பாட்டுங் குறுவெண்பாட்டுங் கைக்கிளைப் பொருண்மேல் வருஞ் செய்யுளும் பரிபாடற் செய்யுளும் வசை யாகிய பொருண் மேல்வருஞ் செய்யுளுமென்ற ஐந்துந் தம்மினொத்த செய்யுளெல்லாம் வெண்பாவென்னு முறுப்பினான் யாக்கப்படுந் தன்மையையுடைய. எ-று எனவே, பெரும்பான்மை குறித்த பொருளை மறையாமற் செப்பிக் கூறலே அதற்கிலக்கணமாயிற்று.1 "முன்னைய நான்கும்” (தொல். பொ. அகத். ருஉ} என்ற அகத்திணையியற் கைக்கிளையும், "கடவுளும் வரையார்” (தொல். பொ. புறத்-உஅ) என்ற உம்மையாற்கொண்ட புறத்திணையியற்கைக்கிளையும்; அன்றிக் 'காமஞ் சாலா விளமை யோள்” (தொல். பொ. அகத்-ருO) என்ற கைக்கிளையும், “கைக்கிளை வகையோடு” (தொல். பொ. புறத்- ரு) என்ற கைக்கிளையுட் கடவுட்கைக்கிளை யல்லாக் கைக்கிளையும் ஆகாவென்று கொள்க ! 1. அதற்கு - வெண்பா என்னும் பாவுறுப்பிற்கு. 2. வெண்பா யாப்பிற்குரியனவாகச் சொல்லப்படும் கைக்கிளைப் பொருளாவன முன்னைய நான்கும் (ருஉ) என அகத்திணையியலிற் கூறப்படும் அகப்புறக் கைக்கிளைப் பொருண்மையும், புறத்திணையியலிற் ‘காமப்பகுதி கடவுளும் வரையார்' என்றவும்மையாற் கொள்ளப்படும் புறப்புறக் கைக்கிளைப் பொருண்மையும், கடவுள்மாட்டுக் கொண்ட கைக்கிளைப் பொருண்மையுமாகும். இவையன்றி அகத்திணையியலிற் 'காமஞ் சாலா விளமை யோள் வழி (அகத் ரு0) கொள்ளப்படும் கைக்கிளையும், புறத்திணையியலிற் கைக்கிளைவகை எனக் குறிக்கப்பட்டவற்றுட் கடவுண்மாட்டுக் கொள்ளப்படும் கைக்கிளையல்லாத கைக்கிளைப் பொருண்மையும் வெண்பா யாப்பிற்கு உரியவாகா எனக்கொள்க என்பதாம்.