பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/601

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா வால்ச ருஅக உ-ம். 'அணங்குகொ லாய்மயில் கொல்லோ கணங்குழை மாதர்கொன் மாலுமென் னெஞ்சு' 6 o a (திருக்குறள்-கoஅக) இஃது அகப்புறக்கைக்கிளை. 'களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை யளியா னளிப்பானே போன்றான் - றெளியாது செங்காந்தண் மெல்விரலாற் சேக்கை தடவந்தே னென்காண்டே னென்ன லால் யான்” (முத்தொள்ளாயிரம்) “மங்குன் மனங்கடைஇ மான்மாலை நின்றேற்குப் பொங்கு மருவிப் புனனாடன் - கங்குல் வருவான்கொல் வந்தென் வனமுலைமேல் வைகித் தருவான்கொன் மார்பணிந்த தார்" (முத்தொள்ளாயிரம்) இவை சுட்டி ஒருவர்ப் பெயர்கோடலிற் புறப்புறக்கைக்கிளை. குடுமிப் பருவத்தே கோதை புனைந்த நெடுமுத்தம் பூத னிருப்பப் படுமுத்தம் புன்னை யரும்பும் புகாஅர்ப் புறம்பனையாய்க் கென்னை முறைய எரிவள்” இது கடவுட்கைக்கிளை. இனி “முன்னைய மூன்றும்” (தொ. பொ. கள-கச) எனக் களவியலுட் கூறிய கைக்கிளையிலும் வருமேனும் உணர்க. இனி ஒருபொருணுதலாது திரிந்துவருங் கலிவெண்பாட்டும் ஈண்டுக் கூறிய நெடுவெண்பாட்டோடு ஒருபுடை யொப்புமையுடைமையின் அக் கலிவெண்பாட்டாக இக்காலத்தோர் கூறுகின்ற உலாச்செய்யுளும் புறப்புறக் கைக்கிளைப் பொருட்டா தல் ஒன்றென முடித்தல் என்னும் உத்தியாற் கொள்க. அவ்வுலாச்செய்யுள் இரண்டுறுப்பாயும் வெண்பாவிற் கெட்டும் வருதலிற் கலிவெண்பாவின் கூறாமாறு ஆண்டுக் கூறுதும். இக்காலத்து அதனை ஒருறுப்பாகச் செய்து செப்பலோசையாகவுங் கூறுவர்; அது துள்ளலோசைக்கே யேற்குமாறுணர்க.