பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரு c剑諡一 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் பரிபாடலென்பது பரிந்து வருவது; அது கலியுறுப்புப்போலாது நான்கு பாவாலும் வந்து பலவடியும் வருமாறு நிற்குமென்றுணர்க. அது மேற்காண்க. அங்கதச்செய்யுள் பண்புத்தொகை : அஃதிரு வகையாதல் மேற்கூறுதும், ஆய்வுரை : இது, வெண்பாவாமாறு உணர்த்துகின்றது G了6凉 இளம்பூரணரும், இது வெண்பாவுக்குரிய ‘பா’ என்னும் உறுப்பினைப் பொருளும் செய்யுளும் பற்றி வரையறுக்கின்றது எனப் பேராசிரியரும் கருத்துரைப்பர். (இ-ள்) நெடுவெண்பாட்டு, குறுவெண்பாட்டு, கைக்கிளை, பரிபாட்டு, அங்கதச்செய்யுள் எனச் சொல்லப்பட்டனவும் அளவு ஒத்தனவும் எல்லாம் வெண்பா யாப்பின எ-து. வெண்பா யாப்பாவது, வெண்சீரானும் இயற்சீரானும் வெண்டளையானும் செப்பலோசையானும் அளவடியானும் முச்சீரீற்றடியானும் வருவது இவையெல்லாம் ஒசையால் ஒக்குமாயினும் அளவாலுந் தொடையாலும் பொருளாலும் இனத்தாலும் வேறுபடுத்திக் குறியிடுகின்றார். நான்கினை அளவென்றும் நான்கின் மிக்கவற்றை நெடிலென்றும் குறைந்தவற்றைக் குறள், சிந்து என்றும் தொல்காப்பியர் வழங்குவர்ஆதலின். இவற்றுள் பொருளாலும் இனத்தாலும் வேறுபடுக்கப்படாத வெண்பாக்கள் நெடுவெண்பாட்டும் குறுவெண்பாட்டும் ஒத்தவையும் (சமனிலை வெண்பாட்டும்) என மூவகையாம். நெடுவெண்பாட்டு என்பது, நான்கின் மிக்க அடிகளையுடைய தாய் வரும் வெண்பாவாகிய பாட்டாகும். ஐந்தடி முதல் பன்னிரண்டடியளவும் வரும் நெடுவெண்பாட்டைப் பிற்காலத்தார் பஃறொடை வெண்பா என வழங்குவர். ஒரூஉத் தொடை பெற்று வரும் பஃறொடை வெண்பாவினை நேரிசைப் பஃறொடை எனவும், ஒரு உத்தொடையின்றி வரும் பஃறொடை வெண்பாவினை இன்னிசைப் பஃறொடையென்றும் - தலுண்டு. குறுவெண்பாட்டாவது, அளவிற் குறுகிய வெண்பாட்டு, இஃது இரண்டடியாலும் மூன்றடியானும் வரும். இரண்டடியும் ஒரு தொடையான் வருவன குறள் வெண்பா எனவும், விகற்பத் தொடையான் வருவன விகற்பக் குறள் வெண்பா எனவும் கூறுவர். வழங்கு -