பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எாம் ச ருஅக. மூன்றடியும் ஒரு தொடையான் ஒத்து வருவது இன்னிசைச் சிந்தியல் வெண்பா. வேறுபட்ட தொடையான் வருவது நேரிசைச் சிந்தியல் வெண்பா கைக்கிளைத் திணை பொருளாக வரும் வெண்பா கைக்கிளை வெண்பா எனவும், அங்கதப்பொருள் பற்றி வரும் வெண்பா அங்கத வெண்பா எனவும் வழங்கப்படும். பரிபாட்டாவது பரிந்து (பலவடிகளையும் சுமந்து) வரும் பாட்டாகும். அஃதாவது ஒரு வெண்பாவாக வருதலின்றிப் பலவுறுப்புக்களோடு தொடர்ந்து முற்றுப்பெறுவது. அங்கதம் என்பது வசை. அங்கதச் செய்யுள் அங்கதமாகிய செய்யுள் எனப் பண்புத்தொகையாகும். ஒத்தவை என்பன, அளவாலும் பொருளாலும் இனத்தாலும் வேறுபடுக்கப்படாத சமனிலை வெண்பாக்களாம். அவையாவன நான்கடியால் வருவன. இவை அளவியல் வெண்பா' எனவும் வழங்கப்படுவன. "ஒருபொருள் நுதலிய வெள்ளடி யியலாற் றிரியின்றி முடிவது கலிவெண் பாட்டே” (செப் - 147) என ஆசிரியர் ஒதினமையாற் புணர்தல் முதலாகிய (உரிப்) பொருள்களுள் யாதானும் ஒரு பொருளைக் குறித்துத் திரியின்றி முடியும் பஃறொடை வெண்பாவினைக் கலிவெண்பா எனவும், குறள் வெண்பா முதலிய எல்லா வெண்பாக்களும் கொச்சகக் கலிக்கு உறுப்பாய்வரின் கொச்சகம் எனவும், பரிபாடற்கு உறுப்பாய் வரின் பரிபாடல் எனவும் கொள்ளப்படும் என்பர் இளம்பூரணர். ‘இனி ஒரு பொருள் நுதலாது திரிந்துவருங் கலிவெண்பாட்டும் ஈண்டுக் கூறிய நெடுவெண்பாட்டோடு ஒருபுடையொப்புமை யுடைமையின், அக்கலிவெண் பாட்டாக இக்காலத் தார் கூறுகின்ற உலாச்செய்யுளும் புறப்புறக் கைக்கிளைப் பொருட்டாதல் ஒன்றென முடித்தல் என்னும் உத்தியாற் கொள்க. அவ்வுலாச் செய்யுள் இரண்டுறுப்பாயும் வெண்பாவிற் கெட்டும் வருதலிற் கலிவெண்பாவின் கூறாமாறு ஆண்டுக் கூறுதும். இக்காலத்து அதனை ஒருறுப்பாகச் செய்து செப்ப லோசையாகவுங் கூறுவர். அது துள்ளலோசைக்கே ஏற்கு. மாறுணர்க” எனவரும் நச்சினார்க்கினியர் உரைப்பகுதி இங்கு நோக்கற்பாலதாகும்.