பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ள ம்ரு ருஅரு 'கவிநிலை வகையும் வஞ்சியும் பெறா" (தொல் செய் - 110) என்புழி, விலக்கப்படாத ஆசிரியப்பாவும், வெண்பாவும் உறுப் பாக வருதலின் வாழ்த்தியல் வகையும் புறநிலை வாழ்த்து முத லாயினவும் கைக்கிளை(யும்) பொருளாக வரும் மருட்பா வென்பது பெற்றாம். கைக்கிளை யதிகாரப் பட்டது கண்டு அதனை ஈண்டுக் கூறினான். ஒழிந்த புறநிலை வாயுறை செவியறிவுறுஉக்களும் பொருளாக மருட்பா வருமென்பது முன்னர் அளவியலுள் (செய் 160) சொல்லுதும். இவற்றுக் கெல்லாஞ் செய்யுள் ஆண்டுக் காட்டுதும். (கககூ) நச்சினார்க்கினியம் : இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி. (இ-ள் கைக்கிளைதான் முன்பு வெண்பாவுறுப்பாகிப் பின்பு ஆசிரியப்பா உறுப்பாக வரவும்பெறும். எறு. இங்ங்னம் வருவது மருட்பா ஆவது உம், அதுதான் அகப் புறக்கைக்கிளை. யென்பது உம் உணர்க. உதாரணம். .திருதுதல் வேரரும்புந் ... ... தணங்கே’’ (புறப்பொருள் வெண்பாமாலை-கைக்கிளை) எனவரும். ஆய்வுரை : இஃது, எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. (இ-ள்) கைக்கிளைப் பொருண்மைதான் வெண்பாவாக வருதலேயன்றி, முதலிரண்டடியும் வெண்பாவாகிக் கடையிரண்டடியும் ஆசிரியமாகி இருபாவினாலும் வரவும் பெறும் &T-s). இவ்வாறு வருவதனை மருட்பா என்பர் ஆசிரியர். இக் கருத்தினானே மருட்பா ஏனை இருசா ரல்லது, தானிது வென்னுந் தன்மை யின்றே (செய்-81) என ஒதினார் என்று கொள்க. 1. புறநிலை முதலிய வாழ்த்துதற் பொருண்மை கலிப்பா வஞ்சிப்பா இரண்டிற்கு மட்டுமே விலக்கப்பட்டமையின் அங்ங்ணம் விலக்கப்படாத ஆசிரியப்பாவும் வெண்பாவும் உறுப்பாகவரும் மருட்டா, புறநிலைவாழ்த்து வாயுறைவாழ்த்து, செவியறிவுறுாஉ, கைக்கிளை என்பன பொருளாகவரும் என்பது பெறப்படும். 2. அகப்புறக் கைக்கிளை என்றது, அகனைந்திணையின் முன்னர் நிகழ்தற்பாலதாகிய ஒருதலைக்காமமாகிய கைக்கிளைப் பொருண்மையினை,