பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எம்.சு ருஅன "ஆயிரம் விரித்த வணங்குடை யருந்தலைத் தீயுமிழ் திறவொடு முடிமிசை யனவர' (பரி. i) என்பது வெண்டளையும் ஆசிரியத்தளையும் விராய் வந் =; قیمته துள்ளலோசைபடச் சொல்லவும்படுதலின், 名第 - - 3. & - இதுபா வென்னும் இயனெறி யின்றிப் பொதுவாய் நின்றது” எனப்படும். உம்மை இறந்தது தழிஇயிற்று. மற்று இது கலிப்பாட்டிற்கும் ஒக்கும் பிறவெனின், ஒவ்வாததாகாதே! ஆசிரியன் இவ்வாறு கூறினமையினென்பது.? அல்லது உங் கலிக்கு ஒதிய இலக்கண மின்மையானும் பரிபாடலெனவே படும் பெரும்பான்மையு மென்பது. தொகுத்து விரித்த பா நான்கனுள்ளும் அடங்காது வேறாங்கால் அது வெண்ப்ாவினான் யாக்கப்படாது பொதுவகையான் யாக்கப்படுமென்றவாறு.8 (க.உ0) இது பரிபாடற்காவதோர் புறநடை கூறுகின்றது. (இ-ள்.) பரி ... லே. எ-து, பரிபாடல் முற்கூறியவாறே வெண்பாவுறுப்பான் வருதலேயன்றி. தொகை ... ... யின். எ-து, தொகை நிலையும் விரியுமாகக் கூறிய பா நான்கனுள். இது...... றி. எ-து, இது பாவென்றறியப்படும் இயல்வழியின்றி. பொது... . ப. எ-து, பொதுப்பட யாக்கப்பட்டு நிற்றற்கும் உரித்தென்று கூறு!.. எ-று. - - 1. ஒவ்வாததாகாதே - ஒக்குமல்லவா? இரண்டெதிர் iமறை ஒருடன் பாட்டினை யுணர்த்தியது. 2. பொதுவாய் நிற்றற்கும் உரித்து என்று கூறினமையின் 3. முற்கூறியவாறு பரிபாடல் வெண்பாவுதுப்பாக வரினும் அஃது ஆசிரியம் வெண்பா என இரண்டாகத் தொகுத்தும் ஆசிரிய நடைத்து வஞ்சி, வெண்பாநடையது கலி என விரித்தும் கூறிய பா நான்கனுள்ளும் அடங்காது வேறாய் எண்ணப்படுமிடத்து வெண்பாவொன்றினால் மட்டுமே யாக்கப்படாது வெண்பா ஆசிரியம் இரண்டற்கும் பொதுவகையால் யாக்கப்படும் என்பதாம். 4. ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பர் என்னும் நால்வகைப் பாக்களையும் ஆசிரியம் வஞ்சி என இரண்டாகத் தொகுத்தும் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா, மருட்பா, பரிபாடல் என ஆறாக விரித்தும் கூறுவராதவின் தொகைநிலையும் விரியுமாகக்

கூறிய பாநான்கனுள்' என்றார்.