பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர து: தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் அவை முறையே நேர்பு, நிரைபு என்னும் அசைகளாகும்; (மேற்குறித்த உகரம்) குற்றெழுத்தொடு பொருந்தின குறிலினை யுகரமாய் வாராதவழி (எ-து.) எனவே குற்றெழுத்தாகிய நேரசையின் பின் இருவகையுகரங்களுள் ஒன்று இணைந்து வருமாயின் அவை குறிலிணை. யுகரமாய் நிரையசையாவதன்றி நேர்பசையாதல் இல்லை என்பதாம். உதாரணம் : வண்டு, நாகு, பாம்பு, எனவும், மின்னு, நானு, தீர்வு எனவும் நேரசை மூன்றின் பின்னும் முறையே குற்றுகரமும் முற்றுகரமும் வந்து நேர்பு என்னும் அசையாயின. வரகு, குரங்கு, மலாடு, பனாட்டு என நிரையசை நான்கின் பின்னர்க் குற்றுகரமும், இரவு, புணர்வு, உலாவு என நிரையசை மூன்றின் பின்னர் முற்றுகரமும் வந்து நிரைபு அசையாயின. நேரின் பின் உகரம் நேர்பு; திரையின் பின் உகரம் நிரைபு என இவையிரண்டும் காரணப் பெயராயின. ரு இயலசை முதலிரண் டேனவை உரியசை. இாைம்பூர ைம் : என்-எனின், மேற்சொல்லப்பட்ட அசைக்குப் பிறிதோர் குறியிடுதல் நுதலிற்று. (இ - ள்.) முற்பட்ட நேரசையும் நிரையசையும் இயலசை யெனக் குறிபெறும். நேர்பசையும் திரைபசையும் உரியசை யெனக் குறிபெறும் என்றவாறு. (ரு) இது, மேற்கூறிய அசை நான் கினையும் இருகூறு செய்து அவற்றுக்கு எய்தாத தெய்துவிக்கின்றது. இனி, ஆட்சியுங் குன னுங் காரணமாக வேறு வேறு பெயர் கொடுக்கின்றது இச்சூத் திரமெனவும் அமையும். (இ-ள்) முதற்கனின்ற நேரும் திரையும் இயற்றிக்கொள்ளப் படாது, இயற்கை வகையான் நின்றாங்கு நின்று தளைப்பனவாம், 1. முதலிரண்டு இயலசை, ஏனவை உரியசை, என இசையும். ஏனையவை' எனற்பாவது, ஏன் வை என்றாயிற்து. முதலிரண்டு என்பன நேரும் திரையும். ஏனவை என்பன நேர்பும் திரைபும், ஏனைய என்பது பேராசிரியர் கொண்ட பாடம்.