பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీః ιδ கு தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் என வேறு ஒதுதலின், ஏனை நான்குங் கொச்சகப் பொருளாகக் கொள்ளப்படும்.! 'தரவும் போக்கும் இயிடைடை மிடைந்தும் ஐஞ்சி ரடுக்கியும் ஆறுமெய் பெற்றும் வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும் பாநிலை வகையே கொச்சகக் கவியென நூல்நவில் புலவர் நுவன்றறைந் தனரே' (செய்யுளியல் கசி அ} என்றாராகலின், இவ்விலக்கணத்தானே பரிபாடலுட் கொச்சகம் வரும் வழித் தரவுஞ் சுரிதகமும் இடையிடை வருதலுங் கொள்க. "வெண்பா வியலான்’ என்றதனால் தன்தளையானும் பிறதளையானும் வந்து ஈற்றடி முச்சீரான் வருவனவெல்லாங் கொள்க.3 அராகமென்பது ஈரடியானும் பலவடியானுங் குற்றெழுத்து நெருங்கி வரத் தொடுப்பது. பெருமைக்கெல்லை ஆறடி. என்னை? "அராகந் தாமே நான்காய் ஒரோவொன்று வீதலும் உடைய மூவிரண் டடியே’’, 'ஈரடி யாகு மிழிபிற் கெல்லை’ என அகத்தியனார் ஒதுதலின். 1. ஏனை நான்காவன: ஆசிரியவடி, வெண்பாவடி, வஞ்சியடி, கவியடி என்பன. இந்நால்வகையடிகளே கொச்சகப்பாவின் அமைப்புக்குச் சிறப்புமுறையில் உரியவாகக் கொள்ளப்படும் என்பதாம். 5. தரவும் போக்கும் இடையிடை மிடைந்தும்(செய்யுளியல்-எசஅ) எனக்" கொச்சகக் கலிக்குக்கூறிய இவ்விலக்கணத்தினால், பரிபாடலுள் கொச்சகம் வருமிடத்துத் தரவும் கொச்சகமும் இடையிடையே வருதலுங் கொள்ளப்படும் என்பதாம், 3. வெண்பா வியலான் வெளிப்படத் தோன்றும் பாநிலைவகையே கொச்சகக்கலி என ஆசிரியர் கூறுதலால், வெண்டனையானும் பிறதளை யானும் வந்து ஈற்றடி முச்சீரால் முடியும் கொச்சகம் எல்லாம் பரிபாடற்கு உறுப்பாகக் கொள்ளப்படும் என்பதாம் . சி. இரண்டடியாதும் பலவடியாலும் குற்றெழுத்து நெருங்கிவரத்தொடுப்பது அராகம் என்னும் உறுப்பாகும். அதன் அடிவரையறை இரண்டடிசிற்றெல்லையாகவும் ஆறடி பேரெல்லையாகவும் அமையும் என்பதற்கு அகத்தி. யனார் கூறிய இலக்கணச் சூத்திரங்களை இளம்பூரணர் தம்முரையில்