பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எம்.எ ருகரு “வண்டொடு தும்பியும் வண்டொடை யாழார்ப்ப விண்ட கடகரி மேகமொ டதிரத் தண்டா வருவியோ டிருமுழ வார்ப்ப அரியுண்ட கண்ணாரோ டாடவர் கூடிப் புரிவுண்ட பாடலோ டாடலுந் தோன்றக் கூடு நறவொடு காம முகிழ் விரியக் கூடா நறவொடு காமம் விரும்ப வினைய பிறவு மிவைபொல் வனவும் அனையவை யெல்லா மியையும் புனையிழைப் பூமுடி நாகர் நகர்.' (இவையும் கொச்சகம்) "மணிமரு டகைவகை நெறிசெறி யொலிபொலி யவிர்நிமிர் புகழ்கூந்தற் பிணிநெகிழ் துளையினை தெளியொளி திகழ்ஞெகிழ் தெரியரிமதுமகிழ் பரிமலர் மகிழுண்கண் வாணுதலோர் மணிமயிற் றொழிலெழி விகன்மலி திகழ்பிறி திகழ்கடுங் கடாக்களிற் றண்ண லவரோ டணிமிக வந்திறைஞ்ச வல்லிகப்பப் பிணிநீங்க நல்லவை யெல்லா மியைதருந் தொல் சீர் வரைவாய் தழுவிய கல்சேர் கிடக்கைக் குளவா யமர்ந்தா னகர்.” (இது முடுகியல்) "திகழொளி முந்நீர் கடைந்தக்கால் வெற்புத் திகழ்பெழ வாங்கித்தஞ் சீர்ச்சிரத் தேற்றி மகர மறிகடல் வைத்து நிறுத்துப் புகழ்சால் சிறப்பி னிருதிறத் தோர்க்கும் அமிழ்து கடைய விருவயி னானாகி மிகாஅ விருவட மாழியான் வாங்க வுகாஅ வலியி னொருதோழங் கால மறாஅ தணிந்தாருந் தாம். மிகாஅ மறலிய மேவலி யெல்லாம் புகாஅவெதிர் பூண்டாருந் தாம் மணிபுரை மாமலை ஞாறிய ஞால மணிபோற் பொறுத்தாருந் தாஅம் பணிவில்சீர்ச் செல்விடைப்பாகன் திரிபுரஞ் செற்றுழிக் கல்லுயர் சென்னி யிமயவி னானாகித் தொல்புகழ் தந்தாருந் தாம்’ (இவையும் கொச்சகம்}