பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/616

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருகசு தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவ ளம் "அணங்குடை யருந்தலை யாயிரம் விரித்த கணங்கொள் சுற்றத் தண்ணலை வணங்கி நல்லடி யேத்திநிற் பரவுதும் எல்லேம் பிரியற்கெஞ் சுற்றமொ டொருங்கே’’ (என்பது ஆசிரியச் சுரிதகம்) “அறவோ ருள்ளா ரருமறை காப்ப' என்னும் பரிபாடலுள் "செறுநர் விழையாச் செறிந்தநங் கேண்மை மறுமுறை யானு மியைக நெறிமாண்ட தண்வரல் வையை யெமக்கு’’ இது, வெள்ளைச்சுரிதகத்தான் இற்றது 'காமங் கண்ணிய நிலைமைத் தாகும்’ என்பது, காமப்பொருள் குறித்து வருமென்றவாறு. கண்ணிய வென்றதனானே முப்பொருளுமன்றிக் கடவுள் வாழ்த் தினும் மலைவிளையாட்டினும் புனல் விளையாட்டினும் பிறவு மெல்லாங் காமங் கண்ணியே வருமென்பது. என்னை? "எல்லேம் பிரியற்க வெஞ்சுற்றமோ டொருங்கே’’ எனத் துணைபிரியாமை காரணமாகத் தொழுதேமென்றலின். “காமரு சுற்றமோ டொருங்குநின் னடியுறை யாமியைத் தொன்றுபு வைகலும் பொலிகென ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும் வாய்மொழி முதல்வநின் றாணிழ றொழுதே' o * (பரி.க:52.5) எனபதும் அது. இனிச் செப்பிய நான்கு என்றது, எண்ணப்பட்ட நான்கனையு மன்று: அன்னவற்றோடு மேற்கூறிய நான்கு பாவும் இடைவந்து விரவுமென்பது. அதுவும் நோக்கிப்போலும் பரிபாடல் என்றது.! 1. கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்தொடு செப்பிய நான்கு என்றதனால், இச்சூத்திரத்தில் வந்த நான்கு என்னுந்தொகை இங்கு எண்ணப்பட்ட கொச்சகமுதலிய நான்கினைக்குறியாது முன்னர்க் கூறப்பட்ட ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா, என்னும் பாவுறுப்பு நான்கினையுங்குறிப்பதாம் எனக் கொண்டார் பேராசிரியர். எனவே இங்குக் கொச்சகம் முதலாகச் சொல்லப்பட்ட உள்ளுறுப்பு நான்கினோடு முற்கூறப்பட்ட பாவுறுப்பு நான்கும் பரிபாடலில் விரவிவரும் என்பதும் இவ்வாறு பலபாக்களின் அடிகளையும் தன்ன. கத்தே ஏற்றுச் சுமந்து வருதலால் இப்பா பரிபாடல் என்னும் பெயர்த்தாயிற்று என்பதும் இங்குப் பேராசிரியர் தரும் விளக்கமாகும்.