பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/617

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எம்.எ ருகன் 'எரிமலர் சினை இய கண்ணை பூவை விரிமலர் புரையு மேனியை மேனித் திருளுெமிர்ந் தமர்ந்த மார்பினை மார்பிற் றெரிமணி விளங்கும் பூணினை மால்வரை யெரிதிரிந் தன்ன பொன்புனை யுடுக்கையை நாவ லந்தண ரருமறைப் பொருளே’ (பரி.1:5-13) என ஆசிரியம் வந்தது. “நின்னொக்கும் புகழ்நிழலவை' (பரி. 4-55) என்பது வஞ்சித்துக்கு; பிறவும் அன்ன காட்டுப; அது பொது வாய் நிற்றலும் உரித்தென்றதனான் அடங்கும். இனிச், செப்பிய நான்கென்றதனான் அராகமின்றி வருத லும், கொச்சகம் ஈற்றடி குறைந்து வருதலும், அவ்வழி அசைச் சீராகி இறுதலும் மேற் கலிப்பாவிற்குச் செப்பிய சுரிதகமாதலுங் கொள்க. (க.உ.க) நச்சினார்க்கினியம்: இது பரிபாடற்கேற்ற உள்ளுறுப்புக் கூறுகின்றது. இவை சிறப்புறுப்பாகிய முப்பத்துநான்குமன்றி இதற்கும் கலிக்கும் உறுப்பாய் வருமென்று கொள்க. (இ.ஸ்) கொச்சகம் என்றது எருத்தே கொச்சகம்’ (தொல்) செய் கருக) என்புழிக் கூறுகின்றாம். சிறப்பில்லதனைக் கொச்சை யென்று கூறும் வழக்கு நோக்கி இதனையுஞ் சிறப்பின்மையாற் கொச்சகம் என்றா ரென்பாருமுளர். குறிலிணை பயின்ற அடி அராகம். சுரிதகம் - அடக்கியல் - எருத்து தரவு என்ற இவற்றோடே முற்கூறிய நான்கு பாவையுந்2 தனக்குறுப் பாகக்கொண்டு காமப்பொருளைக் கருதிய நிலைமைத் தாய். வரும். எ-று. தனக்கென்றதனான் அவையல்லனபிறவுறுப்புங் கொள்வது மேற்கூறுதும் கண்ணிய என்றதனாற் கடவுள்வாழ்த்தும், மலை விளையாட்டும், புனல்விளையாட்டும், பிறவு மெல்லாம் காமங் 1. சிறப்புறுப்பாகிய' என்பது சிறப்புறுப்பாகி' என்றிருத்தல் பொருத்தம். 'முப்பத்து நான்குமன்றி' என்ற தொடரில் முப்பத்துநான்கு’ எனச் சுட்டப்பட்டவை எல்லாச் செய்யுளுக்கும் உரியனவாக மாத்திரை முதலாகச் சொல்லப் பட்ட பொதுவுறுப்புக்களை. 2. ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி என முற்கூறிய நான்கு பாக்களையும்.