பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/618

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருகஅ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் கண்ணியே வருமென்று கொள்க. கொச்சகவுறுப்புப்ப யில வருதலின் முன்வைத்தார். அராகம் இடையினல்லது வாரா. எருத்தினை ஈற்றில்வைத்தது தானன்றியும் அது (பரிபாடல்) வருதலின், "வானா ரெழிலி ...... பரவுதுந் தொழுதே' இது தரவு. “ஒரு சாரர் ...... இயல் கொளநண்ணியவை” இது கொண்டு நிலை : “வண்டு பொரேரெனவெழ ... ... பூமுடி நாகர் நகர்’ இவை கொச்சகம். 'மணி மருடகைவகை ......... குளவாயமர்த்தானகர்’ இது முடுகியல். "திகழொளி ... ... தொல் புகழ் தந்தாருந்தாம்’ இவையுங் கொச்சகம். அன்ன அணங்குடை யருந்தலையாயிரம் விரித்தமை காரண மாகக் கூறலிற் காமங் கூறிற்று. அராகம் வந்தன வந்த வழிக் காண்க. கொச்சகங்களும் வெள்ளையாதல் பெரும்பான்மை மேல்.’ இதற்குக் கூறுகின்ற வுறுப்புக்கள் வந்துழியும் ஒக்கும், முடுகியலும் சொற்சீரடியும் வெள்ளடியொடு தொடர்ந்து வருதலின். 'காமரு சுற்றமொடு ... ... தொழுதே' இதுவுஞ் சுற்றத்தொடு பிரியாமை கூறலிற் காமங் கண்ணிற்று. 'எரிமலர் சினை இய ...... அருமறைப் பொருளே’ என ஆசிரியம் வந்தது. “நின்னொக்கும் புகழ்நிழல வை” இது வஞ்சித் தூக்கு. பிறவுமன்ன. செப்பிய என்றதனான் அராகமின்றி வருதலும், கொச்சகம் ஈற்றடி குறையாது வருதலும், அவ்வழி யசைச்சீராகி யிறுதலும் வெள்ளைச் சுரிதகத்தா னிறுதலும் கொள்க. 1. கொண்டுநிலை...ஒருவர் கூற்றினை ஒருவர் கொண்டு கூறும் நிலையிற் பாடப்பெறுஞ் செய்யுள்.