பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/623

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ளம்அ త్రొrడf l. எண்ணென்பது ஈரடியாற் பலவாகியும் ஒரடியாற் பலவாகி. யும் வருதல். பலவருதலின் எண்ணென்றார்.1 முற்றடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும் என்பது நாற்சீரடியின்றி முச்சீரடியானும் இருசீரடியானும் வருதல் 9 ஒழியசையாகியும் என்றது ஒழிந்த அசையினை யுடைத் தாகியும் என்றவாறு: எனவே, இறுதிச்சீர் ஒன்றும் இரண்டும் அசை குறையப் பெறும் என்றவாறாம். வழியசை புணர்த்தலாவது ஒரு சீரின்கண்ணே பிறிதொருசீர் வரத் தொடாது ஒரசைவரத் தொடுப்பது.4 சொற்சீர்த்திறுதல் என்பது சொற்றானே சீராந் தன்மையைப் பெற்று நிற்றல்.5 சொற்சீர்க் கியல்பே என்றது இப்பெற்றியை யுடைத்துச்சொற் சீரினதியல்பு என்றவாறு. இவ்விலக்கணம் பரிபாடற் செய்யுட்கண் வருமாறு: "ஆயிரம் விரித்த அணங்குடை அருந்தலைத் தீயுமிழ் திறலொடு முடிமிசை அணவர மாயுடை மலர்மார்பின் மையில்வால் வளைமேனிச் சேயுயர் பனைமிசை எழில்மேழி ஏந்திய வாய்வாங்கும் வளைநாஞ்சில் ஒருகுழை ஒருவனை; இது தரவு. 1. எண் என்னும் இவ்வுறுப்பு அம்போதரங்கம் எனவும் வழங்கப்பெறும் . ஈரடியால் இரண்டும். ஒரடியால் நான்கும், முச்சீரால் எட்டும், இருசீராற் பதினாறும் என இவ்வாறு எண்ணப்பெற்று அமைதலின் எண் என்னும் பெயர்த்தாயிற்று. 2. முற்றடி என்றது நாற்சீரடியினை. குறைவுசீர்த்தாகி வருதலாவது நாற்சீரிற்குறைந்து முச்சீரடியாகவும் இருசீரடியாகவும் வருதல். 3. ஒழியசையாகியும்’ என்றது, இறுதிச்சீர் ஒரசையோ ஈாசையோ குறைந்து வருதல். 4. வழியசைபுணர்த்தலாவது ஒருசீர்வருமிடத்தே பிறிதொருசீர்வரத் தொடுக்காது ஒத்தசீராய் ஒரசையொத்து வரத் தொடுத்தல். 5. சொற்சீர்த்து இறுதல்-சொல்தானே சீராந்தன்மையைப் பெற்று முடித.