பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா ம்க மழைநீர்க் குளத்து வாய்பூசி பாடுங் கழுநீர மஞ்சனக் குங்குமக் கலக்கல் வழிநீர வீழுநீரன்று வையை வெருவரு கொல்லியானை வீங்குதோள் மாறன் உருகெழு கூட லவரொடும் வையை வருபுன லாடிய தன்மை பொருவுங்கால் இருமுந்நீர் வையம் பிடித்தென்னை யானுார்க் கொருநிலையு மாற்ற இயையா வருமாவில் அந்தர வான்யாற் றாயிரங் கண்ணினான் இந்திரன் ஆடுந் தகைத்து.' இது காமப் பொருளாகி வரும் வெண்பா மிக்குவந்த பாட்டு. (கககூ) மேலெண்ணப்பட்ட சொற்சீரடியாமா றுணர்த்துதல் துதி விற்று. (இ ள்.) சொற்சீரடி இக்கூறிய நான்கு வகையாலும் வந்து பயிலும் (எ . று) . கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தது: "வடவேங்கடந் தென்குமரி, யாயிடை” (தொல் பாயிரம்) எனவும், 'அஇஉ, எ,ஒ என்னு மப்பா வைந்தும்' (தொல் எழுத்-நூன், 3) எனவும், இவை கட்டுரைக்கட் சொல்லுமாறுபோல எண்ணின மையிற் கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தன. இனி, "முற்றடியின்றிக் குறைவுசீர்த்தாகும் இயல்பாய் வருமாறு: “நின்னொக்கும் புகழ்நிழலவை' (பரி. 1-55) எனவும், “கறையணி மிடற்றினவை கண்ணணி நுதலினவை பிறையணி சடையினவை' எனவும் வரும். 1. "வடவேங்கடந், தென்குமரி ஆயிடை என்றாற்போன்று கட்டுரைக்கட் சொல்லப்பட்டுவருவது கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்த சொற்சீரடி யாகும்.